வடக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (02.07.2026) காலை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.
கடந்த ஜூன் 24ஆம் திகதி கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற சுற்றுலா அபிவிருத்தித் திட்டக் கூட்டத்தின் தொடர்ச்சியாக, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான சுற்றுலாத்துறை தொடர்பான 2027ஆம் ஆண்டுக்குரிய திட்ட முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுற்றுலாத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது. இதன்போது, வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் குறிப்பாக சுற்றுலாப் பணியகத்தின் ஊடாக நேரடியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐந்து விசேட திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கூடுதல் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அமைச்சின் சார்பில் இக்கலந்துரையாடலில் பங்கேற்ற திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எச்.பி.சோமதிலக, 50 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட திட்டங்களின் திட்ட வடிவமானது கட்டாயமாகத் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் நியமங்களுக்கு அமைவாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், முன்மொழியப்படும் அனைத்துத் சுற்றுலாத் திட்டங்களும் துறைசார் சுற்றுலா உபகுழுவிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு