2023 இல் மேற்கொண்ட சீர்திருத்தங்களே இலங்கையை உயர்-மத்திய வருமான நிலைக்குக் கொண்டு சென்றன: ஹர்ஷ டி சில்வா

2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களே இலங்கை மீண்டும் உயர்-மத்திய வருமானத்தைப் பெறும் நாடாக உயர்வதற்குக் வழிவகுத்தன என்று சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அந்த வருமான மட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதே தற்போது முன்னாலுள்ள முக்கிய சவால் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா:

“இலங்கை மீண்டும் உயர்-மத்திய வருமான அந்தஸ்தைப் பெற்ற நாடாக மாறியுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். உலக வங்கி குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நாடு உயர்-மத்திய வருமான நாடாகக் கருதப்படுவதற்குத் தேவையான தலா வருமான வரம்பு 4,630 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், இலங்கையின் மொத்த தேசிய வருமானம் 3,980 டாலராக இருந்தது. ஆனால், 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி, இலங்கையின் தலா மொத்த தேசிய வருமானம் 4,670 டாலராக உயர்ந்துள்ளது.

இலங்கை முதன்முதலில் 2019 ஆம் ஆண்டிலேயே உயர்-மத்திய வருமான நிலையை எட்டியிருந்தது. அப்போது இலங்கையின் வறுமை மட்டம் மக்கள் தொகையில் 11.5 விழுக்காடாக மட்டுமே காணப்பட்டது.

ஆனால், உலக வங்கியினால் 2026 ஜூலை 1 ஆம் திகதி இலங்கை தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், நாட்டின் வறுமை மட்டம் 22 விழுக்காடாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 340 ரூபாய் என்ற அளவிற்கு உள்ளூர் நாணயம் (ரூபாய்) மதிப்பிழந்துள்ளது என்ற உண்மையையும் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

“மேலும், ஒரு சிறிய பகுதியினர் மட்டும் பயனடைவதற்குப் பதிலாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அதன் பலன்களை அனுபவிக்கக்கூடிய வகையிலான நிலையான வளர்ச்சியை (Sustainable development) இலங்கை நிலைநிறுத்துவது அவசியமாகும்.

நாடு மீண்டும் ஒரு குறைந்த வருமானம் பெறும் நாடாக வீழ்ச்சியடைய இடமளிக்காமல், இந்த உயர்-மத்திய வருமான அந்தஸ்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்