சொகுசு ஒருங்கிணைந்த ரிசார்ட்டுகளின் (integrated resorts) உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி நிறுவனமான மெல்கோ ரிசார்ட்ஸ் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Melco Resorts and Entertainment), ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரந்து விரிந்துள்ள தனது வணிகத் தொகுப்பின் மூலம் சுற்றுலா இலக்கு விருந்தோம்பலை (destination hospitality) தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது. மக்காவ், மணிலா, சைப்ரஸ் மற்றும் கொழும்பு ஆகிய நாடுகளில் அமைந்துள்ள ஆறு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருங்கிணைந்த ரிசார்ட்டுகளுடன், உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு, விதிவிலக்கான சேவை, உயர்தர உணவு உன்னதம் மற்றும் மெய்மறக்கச் செய்யும் பொழுதுபோக்கு அனுபவங்களுக்கு மெல்கோ நிறுவனம் பெரும் புகழைப் பெற்றுள்ளது.
இலங்கை பயணிகள் மற்றும் பிராந்திய நுகர்வோருக்கு, இந்த உலகளாவிய பாரம்பரியமானது தற்போது தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த ரிசார்ட்டும், இப்பிராந்தியத்தில் மெல்கோவின் புதிய சுற்றுலா இலக்குமான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) ஊடாக கொழும்பில் கால்பதித்துள்ளது.
மெல்கோ நிறுவனத்தின் வணிகத் தொகுப்பின் மையப்புள்ளியாக விளங்குவது, அதன் முதன்மை ஒருங்கிணைந்த ரிசார்ட்டும், ஆசியாவின் மிகச்சிறந்த சொகுசு சுற்றுலா இலக்குகளில் ஒன்றுமான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் மக்காவ்’ (City of Dreams Macau) ஆகும். இது, மறைந்த பிரபல கட்டிடக் கலைஞர் டேம் ஜஹா ஹடிட்டினால் (Dame Zaha Hadid) வடிவமைக்கப்பட்ட சின்னமான கட்டிடக் கலை அடையாளமான ‘மோர்பியஸ்’ (Morpheus) மற்றும் புதிய வடிவம் பெற்றுள்ள ‘தி ஹவுஸ் ஆஃப் டான்சிங் வோட்டர்’ (The House of Dancing Water) ஆகியவற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சி, மக்காவ் நகரை உலகளாவிய பொழுதுபோக்குத் தலைநகரமாக மாற்றுவதில் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
மக்காவிலுள்ள மற்றொரு பிரம்மாண்டமான ‘ஸ்டுடியோ சிட்டி’ (Studio City) வளாகமானது சினிமா, பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை ஹாலிவுட்டினால் ஊர்க்கப்பட்ட ஒரு சூழலில் ஒன்றிணைக்கிறது. அதன் தனித்துவமான ‘ஆர்ட் டெகோ’ (Art Deco) கட்டிடக்கலை மற்றும் விருந்தினர்களை மெய்மறக்கச் செய்யும் அரிய அனுபவங்களுக்காகப் பெயர் பெற்ற ஸ்டுடியோ சிட்டி, உலகின் முதலாவது ‘எட்டு’ (8) வடிவ இராட்டினமான (Ferris wheel) சின்னமான ‘கோல்டன் ரீல்’ (Golden Reel) உள்ளிட்ட பல முக்கிய ஈர்ப்புகளைக் கொண்டுள்ளதுடன், மக்காவின் மிக முக்கியமான பொழுதுபோக்கு அடையாளங்களில் ஒன்றாகவும் நிமிர்ந்து நிற்கிறது.
‘அல்டிரா மக்காவ்’ (Altira Macau) வளாகமானது, நேர்த்தியான சொகுசு மற்றும் சேவை மேன்மைக்கான மெல்கோ நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. ‘ஃபோர்ப்ஸ் ட்ராவல் கைடு’ (Forbes Travel Guide) அமைப்பினால் 17 முறை ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற ஹோட்டல் மற்றும் ஸ்பாவான அல்டிரா, மிச்செலின் நட்சத்திரம் (Michelin-starred) பெற்ற கன்டனீஸ் உணவகமான ‘யிங்’ (Ying) மற்றும் ஃபோர்ப்ஸ் ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்ற ஜப்பானிய உணவகமான ‘டென்மசா’ (Tenmasa) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை யாவும் இணைந்து, மெல்கோ நிறுவனத்தின் விதிவிலக்கான விருந்தோம்பல், நல்வாழ்வு மற்றும் சமையல் கலைத்திறனின் உன்னத அடையாளங்களாக விளங்குகின்றன.

பிலிப்பைன்ஸில் உள்ள ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் மணிலா’ (City of Dreams Manila), 2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதில் இருந்து அந்நாட்டின் சொகுசு விருந்தோம்பல் துறையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. மணிலா வளைகுடாவை (Manila Bay) நோக்கியவாறு அமைந்துள்ள இந்தத் துடிப்பான நகர ரிசார்ட், பிரீமியம் தங்குமிட வசதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு உன்னதங்கள், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுநேர அனுபவங்களை ஒன்றிணைத்து, தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி வாழ்வியல் மற்றும் சுற்றுலா இலக்காக மணிலாவின் நிலையை வலுப்படுத்துகிறது.
