மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் அவசரகால தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், 07.07.2026 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு கருவிகளின் பயன்பாடு மற்றும் சுனாமி உள்ளிட்ட அனர்த்தங்களின் போது பாதுகாப்பாக செயல்படுவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்களால் தீயணைப்பு கருவிகளின் வகைகள், அவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் நடைமுறைகள், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள், அவசரகால ஒன்று கூடும் இடம் (Assembly Point), பாதுகாப்பான வெளியேற்ற நடைமுறைகள் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களின் போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வு, உத்தியோகத்தர்களின் அவசரகால பதிலளிப்பு திறனை மேம்படுத்துவதோடு, உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தயார்நிலையை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக அமைந்தது.
