எரிபொருட்களை இறக்குமதி செய்யும் பொருளாதாரங்கள் மீண்டும் பணவீக்க அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும்: சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை

புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைந்து உலகளாவிய வளர்ச்சி மேலும் மந்தமடைந்தால்,  வெளிநாட்டு நாணய வருவாய் ஆதாரங்களான சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களை நம்பியிருக்கும் பொருளாதாரங்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயங்கள் உள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதி செய்யும் பொருளாதாரங்கள் மீண்டும் பணவீக்கம் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளால் இலங்கையின் பொருளாதார மீட்சி புதிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் (WEO) குறித்த தனது சமீபத்திய புதுப்பிப்பில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2025 இல் பதிவான 3.5 சதவீதத்திலிருந்து 2026 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகக் குறையும் என்று கணித்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டு எழுச்சியால் ஏற்படும் நன்மைகளை, மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் சரிவடையச் செய்வதே இதற்குக் காரணமாகும்.

இந்த அறிக்கையில் இலங்கை குறித்த பிரத்தியேக மதிப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை என்றபோதிலும், தற்போதைய உலகளாவிய சூழலால் பாதிக்கப்படக்கூடியதாக IMF சுட்டிக்காட்டிய பல தன்மைகளை இலங்கை கொண்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எரிபொருளிலான தங்கியிருப்பு, பொருட்கள் விலை ஏற்ற இறக்கங்களின் தாக்கம், சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களை (remittance) நம்பியிருப்பது போன்ற பண்புகள் இதில் அடங்கும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை சுமார் 32 சதவீதத்தாலும், உணவுப் பொருட்கள் விலை 8 சதவீதத்தாலும் மற்றும் உரங்களின் விலை 26 சதவீதத்தாலும் அதிகரிக்கும் என்று IMF எதிர்பார்க்கிறது.

தனது எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்யும் இலங்கையைப் பொறுத்தவரை, அதிக ஆற்றல் விலைகள் (energy prices) இறக்குமதிச் செலவை அதிகரிக்கலாம், வர்த்தக நிலுவையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் மற்றும் 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஏற்பட்ட கடுமையான பணவீக்கக் குறைப்புச் சூழலைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்கலாம்.

உலகளாவிய தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலியில் (technology value chain) குறைந்த பங்களிப்பைக் கொண்ட மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முதலீட்டு சுழற்சியால் பயனடையும் நாடுகளை விட பலவீனமான பொருளாதார நடவடிக்கைகளையே அனுபவிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட இருப்புக்கள் (limited reserves) மற்றும் சுருங்கிய கொள்கை இடைவெளிகளைக் கொண்ட நாடுகளில், உணவு மற்றும் ஆற்றல் செலவுகள் அதிகரிப்பது வெளிப்புற சமநிலையின்மையை (external imbalances) விரிவுபடுத்தி, செலுத்துநிலை சமநிலை (balance-of-payments) அழுத்தங்களை அதிகரிக்கும் என்றும் IMF எச்சரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட இறையாண்மைக் கடன் தவறிழைப்பைத் (sovereign debt default) தொடர்ந்து, இலங்கை தனது IMF ஆதரவுடனான சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய இருப்புகளைத் தொடர்ந்து கட்டியெழுப்பி, வெளிப்புறப் பாதுகாப்புகளை பலப்படுத்தி வருகிறது.

2024 இன் ஆரம்பப் பகுதி முதல் நிலவி வந்த பணவீக்கக் குறைப்புப் போக்கை, தற்போதைய அதிக ஆற்றல் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் சீர்குலைத்துள்ளன. இதனால் உலகளாவிய முதன்மைப் பணவீக்கம் (headline inflation) 2025 இல் இருந்த 4.1 சதவீதத்திலிருந்து 2026 இல் 4.7 சதவீதமாக உயரும் என்றும், பின்னர் 2027 இல் 3.9 சதவீதமாகக் குறையும் என்றும் IMF எதிர்பார்க்கிறது.

பணவீக்க அழுத்தங்கள் தொடர்ந்து நீடித்தால், மத்திய வங்கிகள் நீண்ட காலத்திற்கு கடுமையான பணவிக் கொள்கைகளை (tighter monetary conditions) பராமரிக்க வேண்டியிருக்கும் என்றும், அதே நேரத்தில் அரசாங்கங்கள் பொதுவான மானியங்களைத் தவிர்த்து, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்க வேண்டும் என்றும் IMF தெரிவித்துள்ளது.

புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைந்து உலகளாவிய வளர்ச்சி மேலும் மந்தமடைந்தால், இலங்கையின் மிக முக்கியமான வெளிநாட்டு நாணய வருவாய் ஆதாரங்களான சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களை நம்பியிருக்கும் பொருளாதாரங்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயங்கள் உள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இத்தகைய அபாயங்களுக்கு மத்தியிலும், தளர்த்தப்பட்ட நிதி நிலைமைகள், வலுவான கார்ப்பரேட் வருவாய்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய தொடர்ச்சியான முதலீடுகளின் உதவியால் உலகப் பொருளாதாரம் ஆரம்பத்தில் அஞ்சியதை விட அதிக மீளெழுச்சித் திறனைக் (resilient) காட்டியுள்ளது என்றும் IMF குறிப்பிட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது