கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த Turkish Airlines TK731 விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது!
ஏயார்பஸ் A330-300 (Airbus A330-300) ரகத்தைச் சேர்ந்த TK731 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதாக (bird strike) அறிக்கை செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருப்பி அனுப்பப்பட்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது.
விமானம் தரையிறங்குவதற்கான அதன் எடையைக் குறைப்பதற்காக (landing weight), மீண்டும் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு முன்னர் சுமார் இரண்டு மணி நேரம் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள வான்பரப்பில் வட்டமடித்தவாறு (holding pattern) இருந்தது. விமானத்தில் இருந்த 246 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னெச்சரிக்கை தரையிறக்கத்திற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, விமான நிலைய அவசரக்கால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவத்தின் போது ‘பிளைட்ரடார்24’ (Flightradar24) செயலியில் உலகளவில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட (most-tracked) விமானமாக இது மாறி, சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
