டொனால்ட் டிரம்ப், ஈரானிய அரசாங்கம் தன்னை படுகொலை செய்ய முயன்றால் அந்த நாட்டின் மீது “ஆயிரக்கணக்கான” ஏவுகணைகளை ஏவப்போவதாக ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பதிவொன்றில் அச்சுறுத்தியுள்ளார்.
“அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியை, அதாவது இந்த விடயத்தில் என்னை (ME!) படுகொலை செய்யவோ அல்லது படுகொலை செய்ய முயற்சிக்கவோ, உலகெங்கிலும் உள்ள பல முனைகளில் ஈரானிய அரசாங்கம் விடுத்துள்ள அச்சுறுத்தல்களின்படி அது செயல்பட்டால், ஈரானிய இஸ்லாமிய குடியரசை நோக்கி 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் (Locked and Loaded) இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உடனடியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பின்தொடரும்” என்று அவர் கூறியுள்ளார்.
“இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டன. மேலும் அமெரிக்க இராணுவம், நீட்டிப்புக்கு உட்பட்டதாக ஒரு வருட காலத்திற்கு ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழிப்பதற்கும் நாசமாக்குவதற்கும் தயாராகவும், விருப்பத்துடனும், தகுதியுடனும் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
