அமெரிக்க முன்னாள் கணவரிடமிருந்து குழந்தைகளைக் கடத்திய பிரிட்டிஷ்-இலங்கைத் தாய்: பிரிட்டனில் வலைவீச்சு

அமெரிக்காவைச் சேர்ந்த தனது முன்னாள் கணவரிடமிருந்து இரண்டு குழந்தைகளைக் கடத்திய பிரிட்டிஷ் பிரஜையான இலங்கை தேயிலை நிறுவன வாரிசு (Tea heiress), கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய இராச்சியத்தில் (UK) தலைமறைவாக உள்ளார்.

இலங்கையின் புகழ்பெற்ற தேயிலை வம்சத்தைச் சேர்ந்த 34 வயதான நிஷிகா சமரதுங்க (Nishika Samaratunga) என்ற பெண்ணே, தனது ஐந்து வயதுடைய பிளெய்ன் பேயர் (Blaine Baier) மற்றும் மூன்று வயதுடைய நதானியேல் பேயர் (Nathaniel Baier – Nate) ஆகிய இரு மகன்களையும் கடத்தி, அவர்கள் இருக்கும் இடத்தை மறைத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாகாணத்தின் டென்வர் நகருக்கு அருகில் வசிக்கும் அவர்களது தந்தை பென் பேயர் (Ben Baier – 43) என்பவரால் இக்குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். பெற்றோரின் விவாகரத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் தாயைச் சந்திப்பதற்காகக் குழந்தைகள் இருவரும் பிரிட்டன் சென்றிருந்தனர். எனினும், மார்ச் 29 அன்று பிரிட்டன் விமான நிலையமொன்றில் குழந்தைகளைத் தந்தையிடம் ஒப்படைக்க நிஷிகா தவறியதுடன், அன்றிலிருந்து அவர் குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.

Blaine and Nathaniel Baier with their father Ben, whose lawyers have raised concerns about the children's welfare

உயர் நீதிமன்ற விசாரணை மற்றும் தந்தையின் உருக்கமான வேண்டுகோள்:

குழந்தைகளை மீட்கும் நோக்கில் தந்தை பென் பேயர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் (High Court in London) சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். இக்குழந்தைகள் இருவரும் பள்ளி அல்லது பாலர்பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என்றும், அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பராமரிப்புகள் கிடைக்கவில்லை என்றும் அவரது சட்டத்தரணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து தந்தை பென் பேயர் கருத்துத் தெரிவிக்கையில், “எனது திருமண முறிவு மிகவும் கடினமான ஒரு காலப்பகுதியாகும். ஆனால் நிஷிகா குழந்தைகளைக் கடத்தி, கொலராடோவில் உள்ள அவர்களது இல்லத்திலிருந்து அப்புறப்படுத்துவாள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எங்களது இரண்டு குழந்தைகளும் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களது அன்றாட வழக்கங்களில் ஏற்படும் இத்தகைய திடீர் மாற்றங்கள் அவர்களது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அவள் சரியான முடிவை எடுத்து குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைகளைக் கண்டறிவதற்கு ஏதுவாக இந்த வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பின்னணி மற்றும் திட்டமிட்ட கடத்தல்:

2020 ஆம் ஆண்டு திருமணஞ் செய்துகொண்ட இந்தத் தம்பதியினர் அமெரிக்காவில் குடியேறிய நிலையில், 2024 இல் அவர்களது உறவில் முறிவு ஏற்பட்டது. குழந்தைகளை லண்டனுக்கு அழைத்துச் செல்ல நிஷிகா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் குழந்தைகளுக்கான முதன்மைக் காவல் உரிமையை (Primary Custody) தந்தை பென் பேயருக்கு நீதிமன்றம் வழங்கியது.

எனினும், மார்ச் மாதம் தாயைச் சந்திப்பதற்கான இரண்டாவது விஜயத்தின் போதே நிஷிகா நீதிமன்ற உத்தரவை மீறிக் குழந்தைகளைக் கடத்தியுள்ளார். நிஷிகாவின் இருப்பிடத்தைக் கண்டறிய லண்டன் உயர் நீதிமன்றம் JP Morgan Chase, HSBC வங்கிகள் மற்றும் பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவை (NHS) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

மெக்வுட்ஸ் (Mackwoods) வாரிசு யார் இந்த நிஷிகா?

கொழும்பு நகரில் வளர்ந்த நிஷிகா சமரதுங்க, தனது இளமைக் காலத்தில் ‘Nishi’ என்ற பெயரில் ஆடை வடிவமைப்பாளராகப் (Fashion designer) பணியாற்றினார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் (UCL) சட்டக் கல்வியையும், டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் (Durham University) நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

அவரது கொள்ளுத் தாத்தாவினால் 1950களில் பொறுப்பேற்கப்பட்ட, தற்போது சுகாதாரம், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் தடம் பதித்துள்ள இலங்கையின் பிரம்மாண்ட கூட்டு நிறுவனமான ‘மெக்வுட்ஸ்’ (Mackwoods) குழுமத்தின் பணிப்பாளராக (Director) அவர் தனது விபரக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் (Managing Director) அவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து