உயர்தரத்தில் தனித்துவமான (கலைத்துறைப்) பாடத்தெரிவுடன் உளச்சார்புத் தேர்விலும் வெற்றி பெற்று மொறட்டுவ பல்கலை வடிவமைப்புக் கற்கைக்குத் தகுதிபெற்ற யாழ் மாணவி!

க.பொ.த. உயர்தரக் கற்கையை ஆரம்பிக்கும்போதே மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் கற்கையை ன(Fashion Design) தனது பிரதான இலக்காக வரித்துக்கொண்டு மனைப்பொருளியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்துக் கற்று,
2025 உயர்தரப் பரீட்சையில் A B C பெறுபேற்றைப் பெற்ற யாழ் மாணவி ஆரபி றுஷாங்கன்,
தொடர்ந்து மொறட்டுவ பல்கலை வடிவமைப்புக் கற்கைக்குத் தெரிவுசெய்யும் சவால் மிகுந்த உளச்சார்பு பரீட்சையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து சித்தி பெற்ற ஒரே மாணவியாக, தனது கனவை நனவாக்கும் பாதையில் சாதனை படைத்துள்ளார்.
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர வர்த்தகப் பிரிவைத் தெரிவுசெய்து ஆங்கிலமொழி மூலம் கற்ற ஆரபி, வர்த்தக பாட தெரிவுகளில் வழமையான மூன்றாவது பாடமாக பொதுவாக பரிந்துரைக்கப்படும் பொருளியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களிலும் நாட்டம் கொள்ளவில்லை.
முன்பள்ளிக் காலம் முதலே வடிவமைப்புத் துறையில் இயல்பாக தான் கொண்டிருந்த நாட்டத்தை நிறைவுசெய்யும் வகையில் மனைப்பொருளியல் பாடத்தை, அதனைத் தமிழ் மொழி மூலமே தொடர முடிந்தபோதும், பாடசாலை அதிபரின் விசேட அனுமதியுடன் தேர்ந்தெடுத்துக் கற்றார்.
இந்தத் தெரிவின் மூலம், உயர்தரத்தின் பின்னர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் கற்கையை உயர்கல்விப் பாடமாகக் கற்கமுடியும் என்பதை அப்போதே தேடிக் கண்டுகொண்டு பெற்றோருக்கு அதுபற்றி விளக்கி, அவர்களின் ஆசியுடன் தனது கனவு இலக்கை நிறைவுசெய்யும் வகையில் உயர்தரக் கல்வியைத் தொடர்ந்தார்.
பின்னர், கலைத்துறைப் பாடத் தெரிவுகளில் ஒன்றான தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடநெறி பற்றி, அந்தத் துறைசார்ந்த பாட ஆசிரியராக கடந்த 15 வருடங்களுக்கு மேலாக உடுவில் மகளிர் கல்லூரியில் கற்பித்துவரும் தமது தாயார் மூலம் அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்ட அவர்,
முன்னதாகத் தான் கற்றுவந்த வர்த்தகத்துறைப் பாடங்களான வணிகக்கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களில், கணக்கியல் பாடத்தைத் தவிர்த்து தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடத்தைத் தெரிவுசெய்து குறுகிய காலத்தில் ஆங்கில மொழி மூலம் கற்க விரும்பினார்.
இத்தகைய ஒரு தெரிவு பொதுவாக பாடசாலை மட்டப் பரீட்சார்த்திகளுக்கு இல்லாதிருந்த காரணத்தினால், தனிப்பட்ட பரீட்சார்த்தியாக 2025ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய அவர், வணிகக்கல்வி A, மனைப்பொருளியல் B, தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் C சித்திகளை பெற்று, சிறந்த Z -Score ஆக 1.0645 புள்ளிகளையும் பெற்றார்.
எனினும், அவரது கனவு இலக்கை அடையவேண்டுமானால், அடுத்த தடைதாண்டல் பரீட்சையாக சவால்கள் நிறைந்த உளச்சார்பு பரீட்சைக்கும் தோற்றி வெற்றிபெறவேண்டும் என்ற இலக்குடன் 2026 மே மாதம் அந்தப் பரீட்சைக்குத் தோற்றிய அவர்,
அந்தப் பரீட்சைக்குத் தோற்ற விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மாணவர்களிலிருந்து தெரிவான 3000 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரீட்சைக்குத் தோற்றி,
அந்தப் பரீட்சையில் தேர்ச்சிபெற்ற 180 மாணவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தோற்றிய சுமார் 80 வரையான மாணவர்களில் வெற்றிபெற்ற ஒரே மாணவி என்ற சாதனையையும் அவர்நிலைநாட்டி, யாழ்ப்பாண மண்ணுக்கும், உயர்தரம் வரையில் தான் கற்ற சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரது பாடத் தெரிவுகளில் வணிகக்கல்வி க.பொ.த. உயர்தரத்தின் வர்த்தக பாடங்களில் ஒன்றாகவும், மனைப்பொருளியல், தொடர்பாடலும், ஊடகக் கற்கையும் என்பவை கலைத்துறைப் பாடங்களாகவும் இருந்த காரணத்தினால், வர்த்தகத்துறைக்குள்ளும் அடங்காமல், கலைத்துறைக்குள்ளும் அடங்காமல், Non Stream என்ற வகைப்பாட்டுக்குள்ளேயே அவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடிந்தது.
இதனால், வர்த்தகத்துறையிலும், கலைத்துறையிலும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கு இருக்கும் ஏராளமான வாய்ப்புக்கள் இவருக்கு இல்லாமல் போனபோதும், படித்தால் வடிவமைப்புக் கற்கை மட்டுமே படிப்பேன் என்ற பிடிவாதத்துடன் இந்த ஆபத்தான தெரிவை தற்றுணிவுடன் அவர் மேற்கொண்டு கற்ற ஆரபி,
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான பின்னர், அதிக சவால்கள் நிறைந்த உளச்சார்பு பரீட்சைக்கும் கடின உழைப்பின் மூலம் சளைக்காமல் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு தோற்றி,
தனது கனவை நிறைவேற்றும் விட்டுக்கொடாத பிடிவாதமான கடின உழைப்புக் காரணமாக, அந்தப் பரீசையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து வெற்றிபெற்ற ஒரே பரீட்சார்த்தியாக சாதனை படைத்துள்ளார்.
Passionate ஆக தான் மேற்கொண்ட தெரிவை ஆத்மார்த்தமாக, உள்ளார்ந்த ஆர்வத்துடனும், கடின உழைப்புடனும் பாடுபட்டதாலேயே எடுத்துக்கொண்ட இலக்கை தன்னால் அடைய முடிந்ததாக கூறும் ஆரபி,
இவ்வாறு தனது கனவுத் துறையான Fashion Design இலக்கை எய்த அவசியமாகவிருந்த மனைப்பொருளியல் பாடத்ததைப் பாடசாலைக் காலத்தில் தெரிவுசெய்து கற்க அனுமதியளித்த அதிபர் துஷ்யந்தி துசீதரன் அவர்களையும்,
மொறட்டுவ பல்கலைக்கழக வடிவமைப்புக் கற்கைக்குத் தெரிவுசெய்யும் உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தமக்கு வழிகாட்டி உதவிய,
பௌதிக விஞ்ஞானத்துறையில் கற்று இதே கற்கையை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்த சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியான வாசனா விமல் சாமிநாதன்,
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் Intergrated Design துறையில் கற்றுவரும் மாணவியான வல்லபை பதிதரன் ஆகியோரையும்,
நன்றியுடன் நினைவுகூருவதாகத் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு