முன்னாயத்த அவசரகால ஒத்திகை நிகழ்வு கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னெடுப்பது தொடர்பில் முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் பொதுமக்கள், திணைக்களங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செயற்படும் விதம் தொடர்பான அனர்த்த முன்னாயத்த அவசரகால ஒத்திகை நிகழ்வுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
​அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், இயற்கை அனர்த்தங்களின் போது மக்களைப் பாதுகாப்பது தொடர்பான அவசரகால ஒத்திகை நிகழ்வுகள் நாடு தழுவிய ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளன.
​இதன் ஒரு அங்கமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வெள்ளப்பெருக்கின் போது கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரந்தன், உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அவசரகால ஒத்திகை நிகழ்வொன்று நடாத்தப்படவுள்ளது.
​இக்கூட்டத்தில் உரையாற்றிய கண்டாவளைப் பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கண்டாவளைப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், இராணுவத்தினர், சுகாதாரத் துறையினர், கல்வித் துறையினர், மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் திணைக்களங்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒருங்கிணைந்து மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
​குறிப்பாக A35 வீதியில் சுமார் 4 அடி உயரத்திற்கு நீர் ஊடறுத்துப் பாய்ந்தமையால் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பெரும் சவால்கள் ஏற்பட்ட போதிலும், பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்புடன் 13 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் 30-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த அவசரகால ஒத்திகை நிகழ்வில் அனைத்துத் திணைக்கள அதிகாரிகளும், பங்குதாரர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
​தொடர்ந்து தலைமையுரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்கள் எவ்வாறு விழிப்பாகவும் பாதுகாப்பாகவும் இயங்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை வழங்கவே ஜனாதிபதி செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் இந்த ஒத்திகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
May be an image of one or more people
​கடந்த வெள்ளப் பெருக்கின் போது கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், தன்னார்வ இளைஞர் மன்றங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் 24 மணிநேரமும் தொடர்ச்சியாகச் சேவையாற்றி, வெள்ள நீரைக் கடந்து படகுகள் மூலம் மனிதர்களையும் விலங்குகளையும் மீட்டெடுத்த அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டினார்.
​அத்துடன், மீண்டும் ஒரு அனர்த்தக் காலத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் ஏற்பாடாகியுள்ள ஒத்திகை நிகழ்விலும் அடுத்து வரும் அனர்த்தக் காலங்களிலும் மாவட்டத்தின் அனைத்துத் திணைக்களங்களும், மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் இணைந்து மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
​இக்கலந்தரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் A.M.R.N.K. Alahakoon, கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், வலயக் கல்விப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், மின்சார சபை பொறியியலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், இராணுவக் கட்டளைத் தளபதி மற்றும் இராணுவத்தினர், சுகாதாரத் துறையினர், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்படப் பல முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து