கௌதாரிமுனை சுற்றுலா முதலீடுகளுக்கான காணிகளை அடையாளப்படுத்த பல்துறை குழு நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ள முதலீட்டாளர்களுக்குக் காணிகளை ஒதுக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், துறைசார் அரச நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களை உள்ளடக்கிய பல்துறை குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான  நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில், கௌதாரிமுனையில் சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்காக இன்று (27.09.2026) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
May be an image of one or more people, people studying and people smiling
கௌதாரிமுனைப் பிரதேசத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக 56 பேர் தமது திட்டங்களைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அவர்களில் 46 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றிருந்தனர். மேலும், 34 பேர் தமது முதலீட்டுத் திட்டங்களுக்கான நிதிக்கூற்றுக்களையும் சமர்ப்பித்திருந்தனர்.
முன்னதாக, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முதலீடுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்போது, அப்பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த திட்டமொன்றைத் தயாரிக்க நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய தயாரிக்கப்பட்ட திட்ட வரைபடம் இன்றைய கலந்துரையாடலின்போது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், கௌதாரிமுனைப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, முதலீடுகளுக்கான காணி ஒதுக்கீடு, நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் தாமதங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
கௌதாரிமுனைப் பிரதேசத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.
இதன்போது, முதலீட்டாளர்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள், குறிப்பாக நடைமுறைத் தாமதங்கள் உள்ளிட்ட விடயங்களை எடுத்துரைத்தனர்.
இதற்குப் பதிலளித்த கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முதலீட்டுக்காகக் குறித்த காணிகள் நில அளவை செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளதாகவும், எந்த முதலீட்டாளருக்கு எந்தப் பகுதியில் எவ்வளவு காணி வழங்குவது என்பது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான தீர்மானமே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, துறைசார் அரச நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களை உள்ளடக்கிய பல்துறை குழுவொன்றை நியமித்து, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்குக் காணிகளை வழங்கும் செயன்முறையை எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இக்குழுவில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் உள்ளடக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து, அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி ஒதுக்கீட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதற்கான முக்கியமான அடுத்தகட்ட நடவடிக்கையாக இத்தீர்மானம் அமைந்துள்ளது.
இக்கலந்துரையாடலில் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், பூநகரி பிரதேச செயலர், பூநகரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், பூநகரி பிரதேச சபையின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து