கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நில ஆக்கிரமிப்புகள் மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுதல் கால்நடைகள் கொல்லப்படுதல் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் இதுவரை எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் பல்வேறு தரப்பினரின் தலையீடுகள் எனப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. குறிப்பாக நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மாறாகஇ நில ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. மேய்ச்சல் தரைகளைப் பயன்படுத்த முடியாத நிலைமை காரணமாக கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன்இ பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
அண்மைக்காலமாகக் கால்நடைகள் கொல்லப்படுதல் பண்ணையாளர்கள் கடத்தப்பட்டுத் தாக்கப்படுதல் மற்றும் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுதல் போன்ற மிகக் கவலைக்குரிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இனிமேலும் பாராமுகமாக இருக்கக்கூடிய விடையமல்ல. இது மக்களின் வாழ்வாதாரம்இ நில உரிமைஇ உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாகும்.
மேய்ச்சல் நிலங்கள் இல்லையெனில் கால்நடைப் பண்ணையாளர்களின் எதிர்காலம் என்ன?
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை என்பது வெறுமனே ஒரு நிலப்பரப்பு அல்ல. அது தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் பொருளாதாரத்தின் அடித்தளமாகும்
.
மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் வசதிகள் குறைக்கப்படுவதாலும் கால்நடைகள் விவசாய பயிர்ச்செய்கையாளர்களின் நிலங்களில் நுழையும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயப் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதுடன் விவசாயிகளுக்கும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகள் இரு தரப்பினரின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதுடன் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை மேலும் சீர்குலைக்கக்கூடும்.
எனவே விவசாயிகளையும் கால்நடைப் பண்ணையாளர்களையும் எதிரெதிர் தரப்பினராக நிறுத்துவது தீர்வாகாது. இரு தரப்பினரின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கக்கூடிய நிரந்தரத் தீர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும்இ மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதும் அவற்றின் பயன்பாடு தடுக்கப்படுவதும் சுற்றுச்சூழல் சமநிலைஇ கால்நடை வளம் விவசாய உற்பத்தி மற்றும் மாவட்டத்தின் பொருளாதாரத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
வாக்குறுதிகள் போதும்! நடைமுறைத் தீர்வு வேண்டும்!
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையைப் பாதுகாப்பதற்காகவும் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் பல்வேறு காலகட்டங்களில் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி முதல் மாவட்டத்தின் அரச நிர்வாக அதிகாரிகள் வரை பல்வேறு மட்டங்களில் தீர்வுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டதனை நாம் யாவரும் அறிவோம்.
ஆனால்இ இந்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.
எனவே இனியும் வெறும் வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு அமைதியாகக் காத்திருக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதும்இ ஏற்கெனவே நடைமுறையிலுள்ள நீதிமன்றத் தீர்ப்பைச் சட்டரீதியாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்துவதும்இ மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பதும் அரசின் பொறுப்பாகும்.

எமது கோரிக்கைகள்
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்:
1. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல்: மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான நடைமுறையிலுள்ள நீதிமன்றத் தீர்ப்பையும் உத்தரவுகளையும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
2. மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தல்: மயிலத்தமடு–மாதவனை மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஏனைய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்து அவற்றின் உரிய பயன்பாட்டை உறுதிப்படுத்தி வர்த்தமாணி பிரகடனத்தினை வெளியிட வேண்டும்.
3. சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல்: மேய்ச்சல் நிலங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாகச் சட்டரீதியான விசாரணைகளை மேற்கொண்டுஇ உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
4. கால்நடைகளின் உயிர்களைப் பாதுகாத்தல்: கால்நடைகள் கொல்லப்படுதல்இ சுட்டுக் கொல்லப்படுதல் மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகச் சுதந்திரமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்து வேண்டும்.
5. பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்: கால்நடைப் பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுத்துஇ அவர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
6. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல்: மேய்ச்சல் நிலப் பிரச்சினையால் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில்இ இரு தரப்பினரினதும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நிரந்தரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
7. கிழக்கு மாகாணத்தின் நில வளங்களைப் பாதுகாத்தல்: மேய்ச்சல் நிலங்கள்இ விவசாய நிலங்கள்இ நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்துஇ நிலப் பயன்பாட்டில் சட்டத்தையும் நீதியையும் உறுதிப்படுத்த வேண்டும்.
8. அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்: மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்வது மற்றும் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது ஒரு தரப்பினருக்கான போராட்டமல்ல!
• எமது போராட்டம் வெறுமனே மயிலத்தமடு–மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல.
• இது கிழக்கு மாகாணத்தின் நில வளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.
• இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.
• இது கால்நடை வளர்ப்புத் தொழிலையும் உணவு உற்பத்தியையும் பாதுகாப்பதற்கான போராட்டம்.
• இது நில ஆக்கிரமிப்புகளுக்கும் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிரான போராட்டம்.
• இது மக்களிடையே திட்டமிட்டு முரண்பாடுகளை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுத்துஇ சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.
• இது நீதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும்இ மக்களின் வாழ்வாதாரங்களுக்காகவும்இ எமது எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டம்.
• இனஇ மதஇ மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்துஇ பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும்.
நவம்பர் 2 – கிழக்கு மாகாணத்தின் குரலாக ஒன்றிணைவோம்!
எனவே எதிர்வரும் 2026 நவம்பர் 2ஆம் திகதிஇ திங்கட்கிழமை மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்கவும்இ கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீதி கோரவும்இ நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்தப் போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புகள் விவசாய அமைப்புகள் கால்நடைப் பண்ணையாளர் சங்கங்கள்இ தொழிற்சங்கங்கள் மதத் தலைவர்கள் இளைஞர்கள் மாணவர்கள் வர்த்தகர்கள் அரசியல் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இன்று நாம் மௌனமாக இருந்தால் நாளை எமது நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.
எனவே நீதிக்காக ஒன்றிணைவோம்!
நிலத்திற்காகக் குரல் கொடுப்போம்!
கால்நடைகளின் உயிர்களைப் பாதுகாப்போம்!
விவசாயிகளினதும் பண்ணையாளர்களினதும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்போம்!
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்!
எமது நிலம் எமது வாழ்வாதாரம்இ எமது உரிமை!
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து!
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையைப் பாதுகாப்போம்!
நீதிக்கான எமது குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அமைப்புகள்
1. கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம்
2. அறம் அமைப்பு
3. மட்டக்களப்பு மாவட்ட கால்நடை கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
4. கால்நடை வளர்ப்போர் கமநல அமைப்பு – மயிலத்தமடு மாதவனை
5. கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகார சபை
6. கிழக்கு மாகாண மீனவத் தொழிற்சங்கம்
7. கிழக்கு மாகாண இந்துக் குருமார்கள் ஒன்றியம்
8. மண்முனை மேற்கு விவசாய சம்மேளனம்
9. மட்டு ஊடக அமையம்
10. மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம்
11. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்
12. படைப்பாற்றலுக்கான வானவில் தூண்கள் வலையமைப்பு