காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம்-எந்த பின்னடைவும் இல்லை, புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் சில கருத்துவேறுபாடுகளால் தாமதம்- அமைச்சர் அருண கருணதிலக

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என தெரிவித்துள்ள துறைமுக சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அருண கருணதிலக இதில் தொடர்பில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திடுவதற்காக இரண்டு நாடுகளின் அமைச்சர்களின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தில் எந்த பின்னடைவும் இல்லை,இது தொடர்பான உடன்படிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது,உடன்படிக்கையில் கைசாத்திடுவதற்கான நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன

ஆரம்பகால கடன்திட்டம் மானிய உதவியமாக மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு இந்தியாவிடமிருந்து மானியமாக கிடைக்கும் நிதியே முழுமையாக பயன்படுத்தப்படும்
இலங்கையின் பல்வேறுபட்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் புரிந்துணர்வு உடன்படிக்கையின் விதிமுறைகள் தொடர்பில் இரண்டு நாடுகளின் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடின்மையே தாமதத்திற்கு காரணம்
இலங்கை தரப்பிலிருந்து பாதுகாப்பு அமைச்சு வெளிவிவகார அமைச்சு சட்டவரைவாளர்கள் திணைக்களம் அனைத்து பங்குதாரர்களும் இதில் ஈடுபட்டிருந்தனர்,பல கருத்துவேறுபாடுகள் காணப்பட்டன ஆனால் எப்படியோ இது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
முன்மொழியப்பட்ட திட்டத்தில் கூட்டு பங்களிப்பு காணப்படும்,இதன் செயற்பாடுகள் தற்போது 25 ஆண்டுகள் என கணிப்பிடப்படுகின்றது.இருப்பினும் ஒப்பந்தம் இறுதியாக்கப்படுவதற்கு முன்னர் இந்த விதிமுறைகள் மாறக்கூடும்
தற்போதைக்கு இந்த திட்டம் 25 வருடங்களுக்கானது ஆனால்; இது மாறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

9abea541-ccf6-443c-b0be-8d8e278928e3
தமிழக அரசே! தமிழகம் வாழ் இலங்கை அகதியை விருப்பமில்லாமல் நாடு கடத்தாதே!
police56
முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - 16 வயது இளைஞன் காயம் - பொலிஸ் தரப்பு தெரிவிப்பது என்ன?
humanright comm
ஹோமாகம பொலிஸ் நிலைய சம்பவம் - விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்
omct
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது சிவில் வெளிக்கான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது நியாயமான எதிர்ப்புக் குரல்களைக் குற்றமயமாக்கும் ஒரு கருவியாக மாறக்கூடாது-சித்திரவதைக்கு எதிரான அமைப்பு
batti mayi2
மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான பொதுமக்கள் அழைப்பு!
sofia
காஸா தாக்குதலில் கூகுளின் கூட்டுப்பங்கு? மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வேலையைத் துறந்த பெண்பொறியியலாளர்
gajendran
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை அகற்ற பொலிஸ் உத்தரவு: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்!
IPKF1
கடைகள் தீப்பற்றி எரிந்தன வீதிகளில் மருத்துவமனைகளில் -உடல்கள் - 1987 இல் சாவகச்சேரி சந்தை மீது இந்திய அமைதிப்படையினரின் தாக்குதல் - வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பதிவுகள்
GSP-EU
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்களால் ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு ஆபத்து - இலங்கை வர்த்தக சம்மேளனம்
Galle-Face-Green
ஷாங்கிரி-லா நில ஒப்பந்த விவகாரம்: 13.7 பில்லியன் ஒப்பந்தம் வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது எப்படி?