ஹோமாகம பொலிஸ்நிலையத்தில் 29 வயது நபர் உயிரிழந்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நிமால்புஞ்சிகேவ இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது
இளைஞனின் மரணம் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அழைப்பாணை விடுத்திருந்தோம் அவர்களில் ஒருவர் எனினும் பொலிஸ்நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைக்கு அனுப்பி அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
விசாரணைக்கு சற்று முன்னதாக பொலிஸ்நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,அவருடைய இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது.என அவர் குறிப்பிட்டுள்ளார்