அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் – கரிசனைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயார்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் குறித்து உள்நாட்டு சர்வதேச அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது
உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் கரிசனைக்குரிய விடயங்கள் குறைபாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அவற்றிற்கு தீர்வை காணலாம்.
பயங்கரவாத தடைச்சட்டம் அதன் ஜனநாயக விரோத தன்மையால் கடந்த நான்கு தசாப்தங்களாக கடும் எதிர்ப்பை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை நீக்குவோம் என வாக்குறுதியளித்துள்ளது
அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அதற்கு பதில் மேலும் ஜனநாயக தன்மை கொண்ட வலுவான சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற மாற்றீடு தேவை.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு புதிய சட்ட கட்டமைப்பு தேவை.
அரசைபாதுகாப்பதற்காகநாங்கள் செயற்படவேண்டும்,சட்டமூலம் குறித்த எந்த விசேட கரிசனைக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காணலாம் நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

court-judge-hammer-gavel-696x398
அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு-உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள்
crime1
கொழும்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போன 24 வயது நபர்- நால்வர் கைதினை தொடர்ந்து மர்மம் விலகியது
CHEMMANY 16
இனவாத ஏச்சுப் பேச்சுகளின் இரைச்சல் எவ்வாறு இலங்கையின் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகள் பற்றிய விமர்சனப்பூர்வமான இணையவழி அறிக்கையிடலை அமைதியாக்குகிறது
Namal-Rajapaksa-2 (1)
சிறைச்சாலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பது யார், மேலும் உண்மை அவர்களோடு மறைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்வது யார்?
nandalal3
மக்கள் ஆதரவற்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் வரிகளை அதிகரிப்பதும் அவசியம் - மத்திய வங்கி ஆளுநர்
parliment
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசாங்கம் தடுக்கின்றது” – சர்வதேச அளவில் முறையிட எதிர்கட்சி தீர்மானம்
suresh
சமூக வலைத்தளப் பதிவுக்காக TID விசாரணைக்கு அழைப்பு: தர்மலிங்கம் சுரேசுக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு
karu11
கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் அனைவருக்கும் ஆபத்தானது
9abea541-ccf6-443c-b0be-8d8e278928e3
தமிழக அரசே! தமிழகம் வாழ் இலங்கை அகதியை விருப்பமில்லாமல் நாடு கடத்தாதே!