2026ஆம் ஆண்டிற்கான மாவீரர் எழுச்சிநாள் இம்மாதம் 27ஆம் திகதி தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ள நிலையில், முல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 01.11.2026இன்று சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த சிரமதானப்பணிகளில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லச் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் இந்துசிரமதானப்பணிகளில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழு, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.