பொலிஸ்காவலில் உயிரிழப்புகள் -2020 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 86

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் பொலிஸார் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2020 ஜனவரி 1 ஆம் திகதிக்கும் இந்த ஆண்டின் (2026) ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பொலிஸ் காவலில் இருந்தபோதோ கைது செய்யப்பட அழைத்துச் செல்லப்பட்டபோதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோதோ மொத்தம் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘தி டெய்லி மார்னிங்’  பத்திரிகையால் தாக்கல் செய்யப்பட்ட RTI கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்நவம்பர் 4 ஆம் திகதி இந்த புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகபட்ச எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் 2023 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன; அது 19 ஆகும். 2020 இல் 16 உயிரிழப்புகளும் 2021 இல் 14 2022 இல் 11 2024 இல் 10 மற்றும் கடந்த ஆண்டில் (2025 இல்) 12 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை இதுவரை நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் (23) சந்தேகநபர்களைக் கைது செய்து அழைத்துச் செல்லும்போது நிகழ்ந்துள்ளன. மேலும் 15 பேர் கைது செய்யப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும்மேலும் 15 பேர் பொலிஸ் சிறைக் கூடுகளுக்குள் தூக்கிட்டும் உயிரிழந்துள்ளனர். தகவல்களின்படி 18 உயிரிழப்புகள் சிறைக் கூடுகளில் வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக இயல்பான மரணங்களாக நிகழ்ந்துள்ளன. ஏழு உயிரிழப்புகள் போதைப்பொருள் உட்கொண்டமையாலும்இ ஐந்து உயிரிழப்புகள் பொதுமக்கள் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னரான காயங்களாலும் ஏற்பட்டுள்ளன.

மேலும் சிறைக்கூட்டிற்குள் வன்முறையாக நடந்துகொண்டமை தடுப்புக்காவல் இடத்தில் இருந்து தப்பிச் செல்லும்போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் பொலிஸ் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் சம்பவம் ஆகியவற்றினால் தலா ஒரு உயிரிழப்பு வீதம் பதிவாகியுள்ளன. பொலிஸ் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் வழக்கு இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள ஏராளமான பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கொழும்பு வடக்கு மத்திய மற்றும் தெற்கு கல்கிஸை ஹோமாகம நவகமுவ கம்பஹா களுத்துறை எல்பிட்டிய காலி மாத்தறை தங்கயடடந சூரியவெவ குருநாகல் கண்டி அனுராதபுரம் இரத்தினபுரி கேகாலை நீர்கொழும்பு மற்றும் களனி ஆகியவை இதில் அடங்கும். குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகிய சிறப்புப் பிரிவுகளிலிருந்தும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் திணைக்கள மட்டத்தில் ஒவ்வொரு உயிரிழப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என வினவியபோது ஒவ்வொரு சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட பிரதேச நீதவான் நீதிமன்றத்தால் நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசேட வழக்குகளில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் ஊஐனு அல்லது மற்றொரு விசேட பொலிஸ் பிரிவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுஇ அதன் முடிவுகள் நீதிமன்றங்களுக்கும் சட்டமா அதிபருக்கும் அறிக்கையிடப்பட்டன.

இந்த உயிரிழப்புகள் தொடர்பாக எத்தனை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது தடை செய்யப்பட்டுள்ளனர் எத்தனை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை வழங்கபொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்  மறுத்துவிட்டது. இந்தத் தகவல்கள் அதிகாரிகளின் தனிப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் தனிப்பட்ட கோப்புகளுடன் தொடர்புடையவை என்றும்இ எனவே தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சட்டத்தின் பிரிவு 5(1)(ய) இன் கீழ் இதனை வெளிப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது. இருப்பினும் ‘தி டெய்லி மார்னிங்’ இந்த மறுப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்; ஏனெனில் இந்த கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை மட்டுமே கோரியதே தவிர அவர்களின் பெயர்களையோ அல்லது அவர்களை அடையாளம் காணக்கூடிய பிற விவரங்களையோ கோரவில்லை

.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

SAJITH X
இலங்கையே, நமது பெயரில் பாராளுமன்றம் என்ன செய்ய அனுமதிக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
court-judge-hammer-gavel-696x398
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உத்தரவிட்ட கம்பஹா நீதவான் இடமாற்றம்
batti mayi
மயிலத்தமடு–மாதவனையில் மீண்டும் பசு கொலை! துப்பாக்கியால் சுடப்பட்டு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசு மீட்பு!
psta no12
மாண்புமிகு அனுரகுமாரதிசநாயக்க அவர்களே-
missing fa26
இலங்கையின் போர் விதவைகளும் காணாமல் போனவர்களைத் தேடும் நீண்ட பயணமும்
Sajith-Premadasa-2 (1)
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசாங்கம் தலையிடுகின்றது – சஜித்
Jaffna boats_pasan-tilakawardana-jkaLhUQhHO0-unsplash
கைப்பற்றப்பட்ட இந்திய படகுகளை நிறுத்திவைப்பதற்கு வடபகுதி துறைமுகங்களில் இடமில்லை – மயிலிட்டியில் 150 படகுகள்
rajeevkanth nove
ஒரு அடக்குமுறையான சூழலை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்
duminda 112
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில்தான் அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும்- துமிந்த நாகமுவ
jordan embas
ஜோர்தானில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாதத் தாக்குதல் -பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு