சபாநாயகருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் செயற்பாடுகளில் தவறான முறையில் தலையிடுகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எதிர்கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணையில் குறிப்பிட்ட சில சரத்துக்களை நீக்கினால் மாத்திரமே தீர்மானம் ஏற்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்குமுரணாணது
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கும் அதன் உள்ள்டக்கத்தினை தீர்மானிப்பதற்கும் எதிர்கட்சிக்கு உரிமையுண்டு
நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத்திற்குள்ள வழிமுறைகளில் ஒன்று.
மேலும் நிலையியற் கட்டளைகளின் கீழ் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் அதனை திருத்துமாறு எதிர்கட்சிக்கு அறிவிவுறுத்தப்பட்டது.
இது நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும் முயற்சி என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்