முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்

சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தனது முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளில் பலவற்றைக் குறிவைத்து அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்துள்ளது. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற போட்டியிடும் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய சுற்று வரிகளிலிருந்து இலங்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வரிகள், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய 12 நாடுகளின் வர்த்தகப் பிரிவுகளைப் பாதிக்கவுள்ளன. முன்னதாக அறிவிக்கப்பட்ட ‘விடுதலை தின’ (Liberation Day) வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, ஏனைய நாடுகளின் வர்த்தக நடைமுறைகள் குறித்து மார்ச் மாதம் வெள்ளை மாளிகை முன்னெடுத்த விசாரணையின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வரிகளின் அடிப்படையில், சீனாவுக்கு அதிகபட்சமாக “40 சதவீதம் வரை” வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வியட்நாமுக்கு 35 சதவீதம் வரையும், ஏனைய நாடுகளுக்கு 20 சதவீதம் அல்லது 25 சதவீதம் வரையும் வரி விதிக்கப்படவுள்ளது. எனினும், ட்ரம்ப் உடன்பட்டுள்ள வரி உச்சவரம்புகள் (Caps) காரணமாக இவற்றில் சில விகிதங்கள் நடைமுறையில் குறைக்கப்படும்.

‘பிரிவு 301’ (Section 301) விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பொருளாதாரங்களில் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, கொரியா, வியட்நாம், தைவான், பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை உள்ளடங்குகின்றன. வெளிநாட்டு அரசாங்கங்களின் நடத்தைகள் மற்றும் கொள்கைகள் அமெரிக்க வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோரை நியாயமற்ற முறையில் பாதிக்கின்றனவா என்பதை ஆராய்வதே ‘பிரிவு 301’ விசாரணைகளின் நோக்கமாகும்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க உற்பத்தியை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் வர்த்தக வரிகளை விதிப்பதை ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மறுபுறம், இறக்குமதி வரிகள் பணவீக்கத்தைத் தூண்டி, நுகர்வோருக்கான விலைகளை உயர்த்துவதுடன் உலகளாவிய வர்த்தகத்தையும் மந்தப்படுத்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்
Gotabaya-Rajapaksa-L
கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுவை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு