இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் லலித்தவுலகால உட்பட மீன்பிடித் கூட்டுத்தாபனத்தின் நான்கு அதிகாரிகள் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள்முகாமைத்துவ பணிப்பாளர்இவிநியோக முகாமையாளர் செயற்பாட்டு முகாமையாளர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2020 இல் மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தின் சாதனமொன்றை கொள்வனவு செய்தவேளை ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இவர்கள் அரசாங்கத்திற்கு 5.85 மில்லியன் இழப்பினை ஏற்படுத்தினாhகள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
