லிட்ரோ காஸ் அறிவிப்பு: 300,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

சந்தைக்கு 300,000 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ காஸ் லங்கா (Litro Gas Lanka) நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (23) முதல் இந்த சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அன்றைய தினமே அதன் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இரண்டு கூடுதல் எரிவாயு கப்பல்கள் பிப்ரவரி 25 மற்றும் பிப்ரவரி 28 ஆகிய திகதிகளில் நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளன.

சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத கேள்வி அதிகரிப்பு காரணமாக அண்மையில் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எவ்வாறாயினும், இன்று முதல் நாளொன்றுக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் தற்போதுள்ள தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போதுமான கையிருப்பை பராமரிப்பதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி இறுதிக்குள் கூடுதல் கப்பல்கள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ காஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவிக்கையில், மார்ச் 12 முதல் அதிக அளவிலான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட நிறுவனம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

கடந்த சில நாட்களாக  பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப்ஸ் (Laugfs) ஆகிய இரு எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் கவலை வெளியிட்டதுடன், பல்வேறு விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகளையும் காண முடிந்தது. விநியோகத் திகதிகள் குறித்து லிட்ரோ நிறுவனம் தமக்கு தெளிவான தகவல்களை வழங்கவில்லை என வர்த்தகர்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், இந்த 300,000 சிலிண்டர்களின் வெளியீட்டுடன், நிலவும் எரிவாயு தட்டுப்பாடு முறையான விதத்தில் நீங்கும் என லிட்ரோ காஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு