தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-

திருமுருகன் காந்தி

தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பதிவுகள் மிகக் கூர்மையானவை, அதேசமயத்தில் அவை எளிய வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கும். அறிவார்ந்த விடயங்களை, சிக்கலான வாசகங்களால் சொல்வதைவிட எளிய வாசகங்களாக அனைவருக்கும் புரியும்படி சொல்வது மிகக்கடினமானது.

Image

 

தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று, “..இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை, உலகின் எந்த சக்தியாலும் வெல்ல முடியாது” எனும் வாசகம். அரசியல் அறிவுரைகளில் மிகவும் ஆழமான பொருள்பொதிந்த வாசகம் இது. முற்போக்கு, இடதுசாரி கோட்பாட்டை ஆழமாக அறிந்தவர்களால் மட்டுமே, வெகுமக்கள் அரசியல்படுவதன் முக்கியத்துவம் புரியும்.

அமெரிக்காவை எதிர்த்து போர்புரிந்த வியத்நாம் போராளிகளின் ஒப்பற்ற தளபதி ஜெனரல் கியாப்பின் அரசியல் போர்தந்திரத்தை தனது எளிய வாசகத்தால் தமிழ் மக்களுக்கு விளக்கியவர் மேதகு பிரபாகரன். அந்த போர் தந்திரங்களை அவரே நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டார். அவரது இறுதி யுத்த கள செயல்தந்திரமாக, போராட்ட முழக்கத்தை மக்களிடம் ஒப்படைத்ததே அவரை உலகளாவிய புரட்சியாளர்களில் தனித்துவமான தலைவராக்கியது. 2009க்குப் பின்பான காலத்தில் மே17 இயக்கம் தேசியத்தலைவரின் அரசியலை தொடர்ச்சியாக பேசி வந்துள்ளது. இனியும் அப்பணியை தொடர்வோம். ஒப்பற்றத் தலைவனின் உயர்ந்த மானுடநேயக் கருத்துகளை உலகெங்கும் கொண்டு செல்வோம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்