சுற்றுலா விசாவில் தங்கியிருந்து கொண்டு, உரிமம் பெறாத சிற்றுண்டிச்சாலைகள்  மதுபானசாலைகள்  – உரிமம் பெறாத வெளிநாட்டு வணிகங்கள் குறித்து  ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

இலங்கையின் சுற்றுலாத் துறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதிலும் வருமானம் வீழ்ச்சியடைந்து வரும் “சுற்றுலா முரண்பாடு” (tourism paradox) குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய டி சில்வா, வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து கொண்டு, உரிமம் பெறாத சிற்றுண்டிச்சாலைகள் (cafes), மதுபானசாலைகள், சர்ஃபிங் முகாம்கள் (surf camps) மற்றும் சுற்றுலா வழிகாட்டி சேவைகளை அதிகளவில் நடத்தி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

“வெளிநாட்டுப் பணம் செலுத்தும் முறைகள் மூலம் வருமானம் வெளிநாடுகளுக்கே கசிகிறது,” என்று எச்சரித்த அவர், இத்தகைய நடைமுறைகள் உள்ளூர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதுடன், இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயையும் இழக்கச் செய்வதாகத் தெரிவித்தார்.

அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் (overtourism) ஏற்பட்டுள்ள வளர்ந்து வரும் சிக்கல்களை அவர் மேலும் கோடிட்டுக் காட்டினார். குறைந்த செலவில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளால் (budget travellers) பிரபலமான இடங்கள் நெரிசலுக்குள்ளாவதாகவும், இயற்கை அதிசயங்கள் சேதமடைவதாகவும், உள்ளூர் மக்கள் தங்களது சொந்த சமூகங்களுக்குள்ளேயே விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“யால சரணாலயம் நெரிசலில் சிக்கியுள்ளது, சிகிரியா அழுத்தம் கொடுக்கப்படுகிறது மற்றும் நமது கடற்கரைகள் மாசுபடைந்துள்ளன,” என்று கூறிய டி சில்வா, கட்டுப்பாடற்ற சுற்றுலா நடவடிக்கைகளால் நாட்டின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் சொத்துக்கள் அழிந்து வருவதாகக் கூறினார்.

புத்தாக்கம் மற்றும் முதலீடுகளை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து வணிகர்களும் ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், உரிமங்களைப் பெற வேண்டும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் மற்றும் வரி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எண்ணிக்கையை விடத் தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக இலங்கையின் சுற்றுலாத் தலங்களைப் பாதுகாக்கும் நிலையான சுற்றுலா முறையை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கம் இப்போது முறையான கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று வலியுறுத்திய டி சில்வா, நடவடிக்கை எடுக்கத் தவறினால் தேசிய வருமானம் மற்றும் சுற்றுலாத் துறையின் நீண்டகால இருப்பு ஆகிய இரண்டும் பாதிக்கப்படும் என எச்சரித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு