(Reuters)
பஹ்ரைன் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த அமெரிக்கக் கொடியுடன் கூடிய ‘ஸ்டெனா இம்பெரேடிவ்’ (Stena Imperative) என்ற எண்ணெய் மற்றும் இரசாயனப் பொருட்கள் தாங்கிக் கப்பல் மீது, திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகள்/பொருட்கள் மோதித் தாக்கியதாக கடல்சார் பாதுகாப்பு ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது, எனினும் அது பின்னர் அணைக்கப்பட்டது. பிரித்தானிய கடல்சார் இடர் மேலாண்மை நிறுவனமான வான்கார்ட் (Vanguard) தகவலின்படி, இந்தச் சம்பவம் கிரீன்விச் நேரப்படி அதிகாலை 02:57 மணிக்கு நிகழ்ந்துள்ளது. கப்பல் இன்னும் பஹ்ரைன் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
“கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் அவர்கள் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,” என்று வான்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, ஈரானின் பதிலடித் தாக்குதலில் சேதமடைந்த முதலாவது அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல் இதுவாகும்.