இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், மொழிபெயர்க்கப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், “இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களைத் தடுக்க, லெபனானில் உள்ள கூடுதல் மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்கு (IDF) அதிகாரம் அளித்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்: “லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தொடர்ந்து வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அந்த பயங்கரவாத அமைப்பு பெரும் விலையைக் கொடுத்து வருகிறது – இனியும் கொடுக்கும்.”
காலிப் (Galilee) பகுதி சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக நாங்கள் வாக்குறுதி அளித்தோம், அதையே நாங்கள் நிறைவேற்றுவோம் என்று காட்ஸ் மேலும் கூறினார்.