கத்தார் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களை கத்தார் வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
“தேவையான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பொருத்தமான தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சகம் தனது X (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கான பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்காக சிறப்பு விமானங்களை (Charter flights) ஏற்பாடு செய்ய அமெரிக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. மேலும், பிற இடங்களில் சிக்கித் தவிப்பவர்கள் வணிக ரீதியான விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யவும் உதவி வருகிறது.
பிப்ரவரி 28 முதல் இதுவரை சுமார் 17,500 குடிமக்கள் மத்திய கிழக்கிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.