ஈரானுடனான போர் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீடிக்கலாம்: கால வரம்பு ஏதுமில்லை என்கிறார் ட்ரம்ப்

CNN

ஈரானுடனான போர் எவ்வளவு காலம் நீடிக்கலாம் என்பது குறித்து தனக்கு “கால வரம்புகள் எதுவுமில்லை” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்   நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றில் டைம் (Time) இதழுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு எதற்கும் கால வரம்புகள் இல்லை. நான் இதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்,” என்று ட்ரம்ப் கூறினார்.

இந்தப் போர் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று ட்ரம்ப் இதற்கு முன்பு பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஆனால், உள்நாட்டில் அரசியல் அழுத்தம் அதிகரித்தாலோ அல்லது தனது இலக்குகள் எட்டப்பட்டதாக அவர் கருதினாலோ, அந்த கால அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

புதன்கிழமை அவர் தனது பல இலக்குகளை டைம் இதழுக்கு விரிவாக விளக்கினார்:

“அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது. அதுதான் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இலக்கு. நான்காவது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic missiles) இருக்கக்கூடாது.”

மற்றொரு நோக்கமாக, ஈரானை வழிநடத்த “பகுத்தறிவுள்ள மற்றும் விவேகமான ஒருவரை” பதவியில் அமர்த்துவது என்றும் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்காவிற்குள் ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்து அமெரிக்கர்கள் கவலைப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ட்ரம்ப்  பதிலளித்தார்.

“அப்படியும் இருக்கலாம்,” என்று ட்ரம்ப் கூறினார். “ஆனால் அவர்கள் அதைப் பற்றி எப்போதும் கவலைப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்களும் அதைப் பற்றி எப்போதும் சிந்திக்கிறோம். அதற்காகத் திட்டமிடுகிறோம். ஆனால், ஆம், சில விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நான் சொன்னது போல், சில மனிதர்கள் இறப்பார்கள். நீங்கள் போருக்குச் செல்லும்போது, சில மனிதர்கள் இறக்கத்தான் செய்வார்கள்.”

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்