ஈரான் அமெரிக்கப் படைகளைத் தாக்குவதற்கு ரஷ்யா உதவுவதை அமெரிக்கா “தீவிரமாக எதிர்கொள்கிறது” -ஐரோப்பாவிற்கான அமெரிக்க இராணுவத் தலைமைத் தளபதி 

அமெரிக்கப் படை வீரர்களை இலக்கு வைக்க ஈரானுக்கு உதவும் எவரையும் அமெரிக்கா “தீவிரமாக எதிர்கொண்டு” (responding robustly) வருவதாக, ஐரோப்பாவிற்கான அமெரிக்க இராணுவத் தலைமைத் தளபதி வியாழக்கிழமை தெரிவித்தார்.

வியாழக்கிழமை நடைபெற்ற செனட் ஆயுதப்படை குழுவின் (Senate Armed Services Committee) விசாரணையின் போது, அமெரிக்க ஐரோப்பிய கட்டளைத் தளபதியும் ஐரோப்பாவின் உச்ச கூட்டுப்படைத் தளபதியுமான ஏர் ஃபோர்ஸ் ஜெனரல் அலெக்ஸஸ் ஜி. கிரின்கேவிச் (இடதுபுறம்) மற்றும் அமெரிக்க போக்குவரத்து கட்டளைத் தளபதி ஏர் ஃபோர்ஸ் ஜெனரல் ராண்டால் ரீட் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

தற்போதைய மோதலில் ஈரானுக்கு ரஷ்யா வழங்கும் உதவி குறித்து, ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல் கேட்ட கேள்விக்கு கிரின்கேவிச் பதிலளிக்கையில், “அமெரிக்க படையினரை உறுப்பினர்களை எந்த வகையிலாவது யாராவது ஆபத்தில் ஆழ்த்தினால், நாம் அதற்குத் தீவிரமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

“நாம் ஏன் இன்னும் அதைச் செய்யவில்லை?” என்று புளூமெண்டல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “செனட்டர், அமெரிக்கப் படைகளை இலக்கு வைக்க ஈரானியர்களுக்கு உதவும் எவருக்கும் நாங்கள் தீவிரமாகப் பதிலளித்து வருகிறோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்று கிரின்கேவிச் கூறினார். மேலும், இது குறித்த விரிவான தகவல்களைத் தொடர்ந்து நடைபெறும் ஒரு இரகசிய அமர்வில் (classified session) பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னணி விவரங்கள்: அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள இடங்கள் குறித்த உளவுத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாகவும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் வளைகுடா நாடுகளின் இலக்குகளுக்கு எதிராக மேம்பட்ட ட்ரோன் யுத்த முறைகளைப் பயன்படுத்த ரஷ்யா ஈரானுக்கு உதவுவதாகவும் சிஎன்என் (CNN) ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்