
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போருடன் இணைந்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில், லெபனானில் இதுவரை 91 குழந்தைகள் உட்பட 630-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனானைத் தளமாகக் கொண்ட ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா குழுவை மட்டுமே தாங்கள் இலக்கு வைப்பதாகவும், பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இருப்பினும், ஹிஸ்புல்லாவிற்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து எச்சரித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், தெற்கு லெபனானின் பெரும் பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களைத் தங்கள் ஊர்களை விட்டு வெளியேறி வடக்கு நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்ச் 2-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை நாட்டில் 634 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,586 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 91 குழந்தைகளும் 47 பெண்களும் அடங்குவர்; குறைந்தது 275 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.