நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய QR குறியீடு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் அளவு, மருத்துவர்கள் பணிக்குச் செல்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் போதுமானதாக இல்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
குறைந்த அளவு எரிபொருள்: அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் பிரபாத் சுகததாச கூறுகையில், தற்போது வழங்கப்படும் வாராந்த ஒதுக்கீட்டின்படி ஒரு நாளைக்கு சுமார் 2 லிட்டர் பெட்ரோல் மட்டுமே பயன்படுத்த முடியும். போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டால் இது எதற்கும் போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பணிக்குச் செல்வதில் சிக்கல்: பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவமனைக்குத் தொலைவிலேயே வசிக்கின்றனர். அத்துடன் ” (On-call) கடமையில் இருக்கும் மருத்துவர்கள் எந்த நேரத்திலும் மருத்துவமனைக்கு அழைக்கப்படலாம். தற்போதைய எரிபொருள் அளவு இதற்கு ஈடுகொடுக்காது.
-
நிர்வாகத்திடம் கோரிக்கை: மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் GMOA கோரிக்கை விடுத்துள்ளது.
-
அவசரக் கூட்டம்: நிலவும் சவால்கள் குறித்து விவாதிக்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (17) ஒரு முக்கியக் கூட்டத்தைக் கூட்டவுள்ளது