எரிபொருள் விலை உயர்வு பல துறைகளை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது

மீன்பிடி, விவசாயம், போக்குவரத்து மற்றும் பேக்கரி துறையினர் நட்டத்தை எதிர்நோக்குவதாக எச்சரிக்கை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ள சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு, நாடு முழுவதும் உள்ள பல தொழில்துறைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏற்கனவே அதிகரித்து வரும் செலவுகளால் திணறி வரும் துறைகள் மீது மேலதிக அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

நேற்று (22) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விலை திருத்தம், ஏற்கனவே உள்ள பொருளாதார சவால்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மீன்பிடி படகு உரிமையாளர்கள், காய்கறி விவசாயிகள், பஸ் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

‘த டெய்லி மோர்னிங்’ (The Daily Morning) இதழிடம் பேசிய ‘பல்நாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின்’ தலைவர் டைரோன் மெண்டிஸ், தங்களின் கவலைகள் குறித்து சமீபத்தில் மீன்பிடி அமைச்சகத்துடன் கலந்துரையாடியதாகக் கூறினார். “மார்ச் 21 அன்று அமைச்சரைச் சந்தித்தோம். வரிகளைக் குறைக்க முடியுமா மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேசி மறுபரிசீலனை செய்ய முடியுமா என்று அவர் உறுதியளித்தார். ஆனால், நள்ளிரவில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.

ஒரு படகிற்கு ஏற்கனவே 40,000 ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்படுவதாகவும், புதிய விலையேற்றத்தால் தினசரி செலவுகள் பல இலட்சங்களால் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “எங்களுக்கு ஒரு நாளைக்கு 10,000 முதல் 12,000 லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது. இப்போது லீற்றருக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 1,000,000 முதல் 1,200,000 ரூபாய் வரை மேலதிக செலவு ஏற்படும்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சி.ஏ.சிறிவர்தன கூறுகையில், கொள்வனவு நடவடிக்கை குறைந்ததால் காய்கறி விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார். “விவசாயிகள் எப்படியோ காய்கறிகளை சந்தைக்குக் கொண்டு வருகின்றனர், ஆனால் வியாபாரிகள் அவற்றை வாங்க வருவதில்லை. இதனால் விலைகள் 25 முதல் 50 ரூபாய் வரை குறைந்துள்ளன. எங்களிடம் போதிய குளிரூட்டி வசதிகளும் இல்லை,” என்றார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன கூறுகையில், ஒருபுறம் விலை அதிகரிப்பு, மறுபுறம் போதுமான எரிபொருள் ஒதுக்கீடு (Quota) வழங்கப்படாமை போன்ற காரணங்களால் பஸ் சேவைகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பேக்கரித் துறையைப் பொறுத்தவரை, மூலப்பொருட்களின் விலை 20% அதிகரித்துள்ளதால், நுகர்வோர் விலையை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அனில் ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இது குறித்த இறுதி முடிவு புதன்கிழமை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எரிபொருள் விலைப் பட்டியல் (மார்ச் 21 நள்ளிரவு முதல்):

  • 92 ஒக்டேன் பெட்ரோல்: ரூ. 375 (ரூ. 75 அதிகரிப்பு)

  • 95 ஒக்டேன் பெட்ரோல்: ரூ. 450 (ரூ. 95 அதிகரிப்பு)

  • ஆட்டோ டீசல்: ரூ. 350 (ரூ. 75 அதிகரிப்பு)

  • சூப்பர் டீசல்: ரூ. 420 (ரூ. 80 அதிகரிப்பு)

அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், தெரிவு செய்யப்பட்ட சில துறைகளுக்குச் சலுகைகள் வழங்கப்படுமெனக் கூறினாலும், தற்போது நிதி உதவி வழங்குவதில் அரசாங்கத்திற்குப் பல வரம்புகள் (Limitations) உள்ளதாகக் குறிப்பிட்டார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி