விமானம் இரண்டாக வெட்டப்பட்டது போல் இருந்தது’: இரண்டு விமானிகளை கொன்ற லாகார்டியா விபத்து – விசாரணை-

ஞாயிற்றுக்கிழமை இரவு லாகார்டியா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தீயணைப்பு வண்டியுடன் மோதிய ஏர் கனடா வானூர்தி AC8646 விபத்தில் விமானத்தின் இரண்டு விமானிகளும் கொல்லப்பட்டனர்,

பலர் கணக்கானோர் காயமடைந்தனர், பயணிகள் மற்றும்
விமானவிபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து தடுமாறினர்.

“நாங்கள் நேரடியாக சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்தோம்,” என்று விபத்து நடந்தபோது தளத்தில் இன்னொரு விமானத்தில் இருந்த 23 வயது லியோ மெடினா கூறினார். “விமானம் இரண்டாக வெட்டப்பட்டது போல் இருந்தது.”

உள்ளூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 23:40 மணிக்கு (GMT திங்கள்கிழமை 03:40) நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகள் கொல்லப்பட்டதோடு, 41 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் — சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. திங்கள்கிழமை மதியம் வரை லாகார்டியா மூடப்பட்டிருந்தது.

விபத்து இடத்தை பார்வையிட்ட பிறகு, அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி விமானத்திலோ அல்லது வேறு எந்த போக்குவரத்திலோ இருந்தாலும் இருக்கை பட்டை அணிவதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். “நேற்று இரவு நடந்தது போல், அவை உயிரைக் காப்பாற்றுகின்றன,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கியுபெக்கை சேர்ந்தஅந்த்வான் ஃபோரெஸ்ட், 30,  உயிரிழந்த ஏர் கனடா விமானிகளில் ஒருவராக கனடிய ஊடகங்கள் அடையாளம் கண்டன. மற்ற விமானி இன்னும் பெயர் சொல்லப்படவில்லை.

“இவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள், எனவே இது முற்றிலும் சோகமான நிகழ்வு,” என்று FAA நிர்வாகி பிரான் பெட்ஃபோர்ட் கூறினார்.

பயணிகளின் விவரணை

மாண்ட்ரியலிலிருந்து வரும் விமானத்தில் இருந்த பயணி ரெபேக்கா லிக்யூரி, தரையிறங்கிய உடனே “”  பாரியசத்தம் கேட்டதாக கூறினார்.

“இறங்கும்போது நிறைய அதிர்வு இருந்தது. பிறகு மிகவும் கரடுமுரடாக தரையிறங்கினோம்… எல்லோரும் உணர்ந்தனர். விமானம் திடீரென்று குலுங்கியது, விமானி  .விபத்தைதவிர்க்க முயன்றார்”

“இரண்டு விநாடிகள் கழிந்து மிகவும் பெரிய சத்தம் கேட்டது. ” என்று அவர் கூறினார்.

பயணிகள் வெளியேற  ஒருவருக்கொருவர் உதவியதாக லிக்யூரி விவரித்தார்.

“நான் உயிருடன் இருப்பதற்கு மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

விசாரணை

லாகார்டியா ஆகாய போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து வெளியான ஒலியில், விபத்திற்கு சில நொடிகள் முன்பு “ட்ரக் ஒன், நில், நில், நில்!” என்று ஒரு பணியாளர் கூக்குரலிடுவது கேட்கிறது.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) தலைவர் ஜெனிஃபர் ஹோமன்டி திங்கள்கிழமை விசாரணை தொடங்கியதை உறுதிப்படுத்தினார். விமானத்தின் காக்பிட் குரல் பதிவு மற்றும் விமான தரவு பதிவு ஆகியவை சேதமடையாமல் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்கிறோம் என்று கூறினார்.

மற்றொரு பயணி ஜாக் கேபட் கூறினார்: “வழக்கமான தரையிறக்கத்திற்காக கீழே சென்றோம். உடனே ஏதோவொன்றை மோதினோம், அதிலிருந்து குழப்பமாகிவிட்டது… எல்லோரும் குனிந்து, எல்லோரும் கத்திக்கொண்டிருந்தனர்.”

 — விபத்தின் போது விமானத்தின் தரையில் உண்டான துளையில் விழுந்த ஒரு விமான சேவையர் தனது இருக்கையில் கட்டப்பட்டபடி உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு கடுமையான ஆனால் உயிரை அச்சுறுத்தாத காயங்கள் உள்ளன.

தாக்கம்

அமெரிக்காவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றான லாகார்டியாவில் விபத்து பயண குழப்பத்தை ஏற்படுத்தியது — நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமடைந்தன அல்லது ரத்தாயின.

லாகார்டியாவில் கடந்த 34 ஆண்டுகளில் மரணம் நடைபெற்ற விபத்து இல்லை என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

கனடா பிரதமர் மார்க் கார்னி இதை “மிகவும் வேதனையளிக்கிறது” என்று அழைத்தார், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “பயங்கரமானது” மற்றும் “ஆபத்தான தொழில்” என்று கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்