25 மார்ச்,
மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய டொனால்ட் டிரம்ப், தனது புதிய உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளரின் (Secretary of Homeland Security) பதவியேற்பு விழாவின் போது மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து உரையாற்றினார்.
ஈரானிடம் தற்போது கடற்படை, தலைவர்கள் அல்லது ரேடார் வசதிகள் எதுவும் மிஞ்சவில்லை என்று அவர் முன்பு கூறிய கருத்துக்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதுடன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு “மிகப்பெரிய வெற்றி” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்: “நாங்கள் சரியான நபர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்,” என்றார்