அமெரிக்க ” ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப், வியாழக்கிழமை இரவு தனது ‘Truth Social’ தளத்தில் ஈரானுக்கு எதிராகப் புதிய மற்றும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் பதிவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
-
இராணுவ பலம்: “உலகின் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த நமது இராணுவம், ஈரானில் எஞ்சியிருப்பதை அழிக்க இன்னும் தொடங்கவே இல்லை,” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
-
அடுத்த இலக்குகள்: “அடுத்ததாகப் பாலங்கள், அதன் பிறகு மின் உற்பத்தி நிலையங்கள் (Electric Power Plants)!” என அவர் தனது அடுத்தகட்ட தாக்குதல் இலக்குகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
ஈரான் தலைமைக்கு எச்சரிக்கை: ஈரானின் புதிய தலைமை என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும், அதனை அவர்கள் மிக விரைவாக (FAST) செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பின்னணி:
இதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, ஈரான் அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கைக்கு வராவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈரான் காட்டும் தாமதமே ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான கருத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.