மத்திய கிழக்கு போர் – மூன்று நாடுகளும் சர்வதேச சட்டங்களை மீறுகின்றன- சர்வதேச நிபுணர்கள் கூட்டாக கடிதம்

மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளால் சர்வதேச சட்டம் தீவிரமாக மீறப்படுவதாகக் கருதி, 100-க்கும் மேற்பட்ட சர்வதேச சட்ட நிபுணர்கள் “ஆழமான கவலை” தெரிவிக்கும்  கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கல்வியாளர்களும் முன்னாள் அரசு அதிகாரிகளும், அமெரிக்காவுடனான தங்கள் தொடர்பின் காரணமாக, தங்கள் கவனம் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சட்ட நிபுணர்கள், போரில் அமெரிக்காவின் நடவடிக்கைகளும் வாக்குமூலங்களும் மிகவும் கவலைக்குரியவை என்றும், சில சந்தர்ப்பங்களில் அவை சர்வதேச சட்ட மீறல்களாக அமைகின்றன என்றும் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சாசனம், சுயரட்சணை அல்லது பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாமல் பலப்பிரயோகத்தை தடை செய்கிறது — அந்த சாசனத்தை ஈரான் மீதான தாக்குதல் தெளிவாக மீறியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபுணர்களில் முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரிகளும் சர்வதேச சட்டப் பேராசிரியர்களும் அடங்குவர். ஈரானின் மின் நிலையங்களை “அழித்துவிடுவேன்” என்று அதிபர் டிரம்ப் மிரட்டியதுட்பட, அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்தும் “அதிர்ச்சிகரமான வாக்குமூலங்களை” அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போரின் முதல் நாளில் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர் — அது அமெரிக்காவின் தாக்குதலால் நிகழ்ந்ததென சான்றுகள் சுட்டுகின்றன. பொறுப்பானவர்கள் அலட்சியமாக செயல்பட்டதற்கான சான்றுகள் கிடைத்தால், அது போர்க்குற்றமாக கருதப்படலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். பென்டகான் அந்த தாக்குதலை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த திறந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதத்தில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம், டிரம்ப் “முழு பிராந்தியத்தையும் பாதுகாப்பாகவும் நிலையாகவும் மாற்றி வருகிறார்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறினார்: “இந்த மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு முடிவுகளை அதிபர் இந்த ‘நிபுணர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் எடுக்கவில்லை — மாறாக, அமெரிக்க மக்களின் சிறந்த நலனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கிறார்.”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு