தெற்கு ஈரானில் வீழ்ந்த அமெரிக்காவின் F-15 போர் விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் (Search and Rescue) நடைபெற்று வருவதாக பிபிசியின் அமெரிக்க செய்திப் பங்காளியான சிபிஎஸ் (CBS) நியூஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
விமானத்தில் எத்தனை வீரர்கள் இருந்தார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மற்றும் சிபிஎஸ் நியூஸ் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட படங்களின்படி, குசெஸ்தான் மாகாணத்தில் (Khuzestan Province) ஒரு எரிபொருள் நிரப்பும் விமானமும் (Refuelling plane) மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களும் தாழ்வாகப் பறப்பது தெரியவந்துள்ளது. இது தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த போர் விமானத்தை ஈரானிய படைகளே சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் அரசு ஊடகங்கள் உரிமை கோரியுள்ளன.