வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி
ஜே.டி. வான்ஸ், அமெரிக்கா தனது “சிவப்புக் கோடுகளை” (உறுதியான நிபந்தனைகளை) தெளிவாக முன்வைத்ததாகவும், ஆனால் ஈரான் “எங்களது நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
“ஈரானியர்கள் எங்களது நிபந்தனைகளை ஏற்கும் வகையிலான ஒரு சூழலை எங்களால் எட்ட முடியவில்லை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளை ஏற்பதற்கு ஈரான் மறுத்துவிட்டதாலேயே, 21 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்படிக்கையும் இன்றி முடிவுக்கு வந்துள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது