இலங்கைக்கருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை: பென்டகன் அறிவிப்பு

ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள பென்டகனின் அறிக்கையின்படி, ‘எம்/டி டிபானி’ (M/T Tifani) என்ற அந்தப் படகில் அமெரிக்கப் படைகள் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஏறிச் சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசக் கடல் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் ‘சந்தேகத்தின் பேரில் ஏறிச் சோதனையிடும் உரிமை’ (Right-of-visit maritime interdiction) என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தச் சோதனையின் போது குறித்த கப்பல் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இக்கப்பல் போட்ஸ்வானா (Botswana) நாட்டின் கொடியின் கீழ் இயங்குவதாக அடையாளம் காணப்பட்ட போதிலும், பென்டகன் இதனை ‘எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத (Stateless)’ ஒரு கப்பல் என வர்ணித்துள்ளது.

ஈரானுடன் தொடர்புடைய கடத்தல் வலையமைப்புகளைமுடக்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டவிரோத வலையமைப்புகளை சிதைக்கவும், ஈரானுக்கு ஆதரவளிக்கும் தடை விதிக்கப்பட்ட கப்பல்களை அவை எங்கு இயங்கினாலும் தடுத்து நிறுத்தவும் உலகளாவிய கடல்சார் அமலாக்க முயற்சிகளை நாங்கள் முன்னெடுப்போம் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். தடை செய்யப்பட்ட கப்பல்களுக்குச் சர்வதேசக் கடற்பரப்பு ஒரு புகலிடமல்ல,” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்