குவைத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் தனது அனைத்து விமானச் சேவைகளும் வரும் 2026 ஜூலை 2 ஆம் தேதி முதல் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் ‘முனையம் 4’ (Terminal 4) ஊடாகக் கையாளப்படும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) அறிவித்துள்ளது.
இந்த விமானச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், இந்த முனைய மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறும், விமான நிலையப் பதிவு (Check-in) மற்றும் பிற விமான நிலைய நடைமுறைகளுக்காகக் கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது குறித்த மேலதிக விபரங்களுக்குப் பயணிகள் தங்களது இணையதளத்தைப் பார்வையிடுமாறு அல்லது 24 மணி நேரமும் இயங்கும் உலகளாவிய தொடர்பு மையத்தைத் (Global Contact Centre) தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.