ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உரிமை கோரப்படாமல் தேங்கிக் கிடக்கும் 1,000க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்

இறக்குமதியாளர்கள் இதுவரை  சுங்க விடுவிப்பு நடைமுறைகளை நிறைவு செய்யாததால், சுமார் 1,025 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உரிமை கோரப்படாமல் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்களில் 625 வாகனங்கள், இலங்கை வந்தடைந்ததில் இருந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக துறைமுகத்திலேயே இருப்பதை சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, இந்த வாகனங்கள் எவையும் சுங்கக் குற்றப் பதிவுகளுக்கு உள்ளாகவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (Customs Ordinance) 129வது பிரிவின் கீழ், எவ்வித சுங்க மீறல்களும் இல்லாதபோதிலும் உரிமை கோரப்படாமல் இருக்கும் வாகனங்கள், எதிர்காலத்தில் ஏலம் மூலமாகவோ அல்லது டெண்டர் நடைமுறை மூலமாகவோ விற்பனை செய்யப்படும் என புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இலங்கைச் சட்டத்தின்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும் வந்தடைந்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் உரிய வரிகள் மற்றும் தீர்வைகளைச் செலுத்தி விடுவிக்கப்பட வேண்டும். இறக்குமதியாளர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அந்தப் பொருட்களை விற்பனை செய்து, அரசுக்குச் சேர வேண்டிய வரிகளை மீளப்பெறுவதற்கும், துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களை அந்த வருமானத்தில் இருந்து ஈடுசெய்வதற்கும் சுங்கத் திணைக்களத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.

Over 1,000 imported vehicles remain unclaimed at Hambantota Port

பொருந்தக்கூடிய அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களைக் கழித்த பிறகு எஞ்சியிருக்கும் தொகை இறக்குமதியாளருக்கு வழங்கப்படும்.இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கு மேலாக விடுவிக்கப்படாமல் இருக்கும் போது, அது குறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு துறைமுக அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்பதையும் சுங்கப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு தேங்கியுள்ள வாகனங்கள் குறித்து சுங்கத் திணைக்களத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திணைக்களம் முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது வாகனங்களை விடுவிக்க முடியாமைக்கு நியாயமான காரணங்களை முன்வைக்கும் இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளைக் பரிசீலிக்க சுங்கத் திணைக்களம் தயார் நிலையில் உள்ளதாகவும் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்