எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாற்றல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் நாளை (27) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பிரதிப் பொதுச்செயலாளராக சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை ஒன்றுக்கே இவ்வாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், தான் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக சஜித் பிரேமதாச தனது சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார்.