சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் எரிபொருள் விலைகளை மாற்றமின்றிப் பேண இலங்கை தீர்மானம்: டீசலில் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை

தொடர்ந்து நிலவி வரும் சர்வதேச மோதல்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் செலவுகள் அதிகரித்து வரும் போதிலும், எதிர்வரும் மாதத்திற்கான உள்நாட்டு எரிபொருள் விலைகளை மாற்றமின்றிப் பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த  (CPC) தலைவர் சாந்த ராஜகருண, யுத்தத்திற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் உலகச் சந்தையில் டீசலின் விலை 158.9 சதவீதத்தால் அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் அதன் விலை 135.9 சதவீதத்தால் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டினார்.

“தற்போது டீசல் லீட்டர் ஒன்றிற்கு சுமார் 63 ரூபா முதல் 70 ரூபா வரை கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுகிறது. எனினும், டீசல் விலையை உயர்த்தாமல் நுகர்வோரைக் பாதுகாக்கும் நோக்கில், இந்த நட்டத்தை அரசாங்க பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே ஏற்றுக்கொள்கிறது” என ராஜகருண தெரிவித்தார்.

இலங்கைப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் டீசல் மிக முக்கிய பங்கு வகிப்பதால், உலகச் சந்தையில் ஏற்படும் விலை அதிகரிப்பின் முழுமையான தாக்கத்திலிருந்து உள்நாட்டு நுகர்வோரைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் கூட்டுத்தாபனமும் தீர்மானித்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இதற்கு மாறாக, பெட்ரோல் விலையானது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 141 சதவீதத்தால் அதிகரித்து சர்வதேசப் போக்கை எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இம்மாதத் தொடக்கத்தில் பெட்ரோல் விலை குறைந்திருந்த போதிலும், அண்மைக்கால சர்வதேச மோதல்களின் தீவிரமடைதலால் தற்காலிகமாக உயர்ந்து பின்னர் நிலையான தன்மையை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் உள்நாட்டு விநியோகம் 14 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்து மீண்டும் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அத்துடன், செங்கடலில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் கடல்வழிப் போக்குவரத்துச் செலவுகளையும் காப்பீட்டுக் கட்டணங்களையும் உயர்த்தியுள்ளன.

“இந்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, பொதுமக்களுக்கு விலைக் குறைப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை” எனத் தெரிவித்த ராஜகருண, ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவுகள், சரக்கு இருப்பு தாமதங்கள் காரணமாக உள்நாட்டு விலைகளில் பிரதிபலிக்க சுமார் இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்பதால், சர்வதேச நிலைமைகள் சீரடைந்தால் எதிர்வரும் மாதங்களில் நிவாரணம் கிடைக்கக்கூடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்