போரால் அனைத்தையும் இழந்த மக்களுக்கு 17 ஆண்டுகளாகத் தொடரும் உதவிப் பணி – ஆளுநர் பாராட்டு

மனிதநேயமே மிக முக்கியமானது. உதவி பெற்றவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்ததும், தம்மைப் போன்று உதவி தேவைப்படுவோருக்குக் கரம் கொடுக்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
May be an image of one or more people, wedding and dais
2009ஆம் ஆண்டு போர்ச் சூழலில் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து உதவி வழங்கிவரும் ‘உதவும் உறவுகள்’ அமைப்பின் 17ஆவது ஆண்டு விழா, ‘மீட்டுப்பார்க்கிறோம் 2009’ என்ற கருப்பொருளில் நேற்று (18.10.2026) ஞாயிற்றுக்கிழமை காலை உருத்திரபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
May be an image of dancing
இடம்பெயர்வின்போது கிளிநொச்சி மாவட்டச் செயலராகப் பணியாற்றிய தாம், மக்கள் அனுபவித்த துயரங்களையும் இழப்புகளையும் நேரடியாகக் கண்டதாக ஆளுநர் நினைவுகூர்ந்தார். சொந்த இடங்களையும் உடைமைகளையும் இழந்து, ஆவணங்களின்றி, வருமானமின்றி மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் துயரத்திலிருந்து மீள்வது மிகக் கடினமான பயணம் எனக் குறிப்பிட்டார்.
அத்தகைய சூழலில், போர் முடிவடைந்த பின்னரும் மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது சொந்த முயற்சியிலும் நிதியிலும் உதவிப் பணிகளை முன்னெடுத்துவரும் ‘உதவும் உறவுகள்’ அமைப்பின் நிறுவனர் சுப்பிரமணியம் வெற்றிவேல்நாதனின் சேவையை ஆளுநர் பாராட்டினார். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு 17 ஆண்டுகளாக உதவிவருவது மகத்தான மனிதநேயப் பணி என்றும் குறிப்பிட்டார்.
‘பணம் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்தது அல்ல, பிறருக்கு உதவும் மனமும் அறநெறியும் தான் நிலையானவை’ என வலியுறுத்திய ஆளுநர், பிறருடைய உரிமைகளை மதித்து, நீதியுடனும் நேர்மையுடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். உண்மையான மனதுடன் செய்யப்படும் உதவி பல மடங்காகத் திரும்பி வரும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டார்.
மேலும், ‘உதவும் உறவுகள்’ அமைப்பின் உதவியால் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள், எதிர்காலத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் கரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உதவிகள் உண்மையில் தேவையுள்ளவர்களைச் சென்றடைவதுடன், அவர்கள் தமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
May be an image of one or more people and temple
மக்களின் துயரத்தை உணர்ந்து, அவர்களின் எதிர்காலத்துக்காகத் தொடர்ந்து பணியாற்றிவரும் ‘உதவும் உறவுகள்’ அமைப்பின் சேவை மேலும் பலருக்குப் பயனளிக்க வேண்டும் என வாழ்த்திய ஆளுநர், அதன் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்குத் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட அழைக்கப்பட்ட விருந்தினர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அமைப்பின் பயனாளர்கள் கலந்துகொண்டனர்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

france4
பிரான்ஸ் ஒரு கொந்தளிப்பான வார இறுதிக்குப் பிறகு உள்நோக்கிப் பார்க்கிறது: ஒரு சுருக்கம்
kavantissa
கவந்திஸ மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் பெரமுன உறுப்பினர்- அரச ஊடகங்கள்
arrest1
நாமல்ராஜபக்சவின்செயலாளர் சஞ்சய அமரசிங்க கைது
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? உலப்பன தேரரிடம் வாக்குமூலம் பதிவு
CHEMMANY 16
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனைக் கைதி சோமரத்னவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!
srisena
ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலையேற்பட்டமைக்காக பௌத்த மதகுருமாரிடம் மன்னிப்பு கோரினார் சிறிசேன- தனது ஆட்சிக்காலத்தில் நடந்த தவறு குறித்தும் சுட்டிக்காட்டினார்-
douglas office
டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை: பல மணி நேரம் சல்லடை போட்ட சி.ஐ.டி!
NATO ARMY
நாம் அறியாமலேயே மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா?
france violence
பலவீனமான பொறி—பிரான்ஸ் முழுவதிலும் நிலவும் ஆத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல்
kassapa12
ஜனாதிபதி ஞானசாரரை விடுதலை செய்ய மறுத்தால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வோம் - கஸ்ஸப்ப தேரர்