டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை: பல மணி நேரம் சல்லடை போட்ட சி.ஐ.டி!

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைமைச் செயலகமும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதான அலுவலகமுமான வளாகத்திற்குள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிறப்பு அதிகாரிக் குழுவினர் இன்று (19.10.2026) திடுதிப்பென நுழைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட தேடுதல்  ஆணையை (Search Warrant) வைத்தே சி.ஐ.டி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இன்று காலை ஸ்டான்லி வீதியிலுள்ள 273 ஆம் இலக்க வளாகத்திற்குள் நுழைந்த அதிகாரிகள், அலுவலக அறைகள், ஆவணக் காப்பகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள முழு வளாகத்தையும் அங்குலம் அங்குலமாகச் சல்லடை போட்டுத் தேடினர்.

தேடுதல் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், EPDP கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையிலேயே, அலுவலக நிர்வாகப் பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

france4
பிரான்ஸ் ஒரு கொந்தளிப்பான வார இறுதிக்குப் பிறகு உள்நோக்கிப் பார்க்கிறது: ஒரு சுருக்கம்
kavantissa
கவந்திஸ மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் பெரமுன உறுப்பினர்- அரச ஊடகங்கள்
arrest1
நாமல்ராஜபக்சவின்செயலாளர் சஞ்சய அமரசிங்க கைது
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? உலப்பன தேரரிடம் வாக்குமூலம் பதிவு
CHEMMANY 16
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனைக் கைதி சோமரத்னவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!
srisena
ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலையேற்பட்டமைக்காக பௌத்த மதகுருமாரிடம் மன்னிப்பு கோரினார் சிறிசேன- தனது ஆட்சிக்காலத்தில் நடந்த தவறு குறித்தும் சுட்டிக்காட்டினார்-
NATO ARMY
நாம் அறியாமலேயே மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா?
france violence
பலவீனமான பொறி—பிரான்ஸ் முழுவதிலும் நிலவும் ஆத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல்
856220159_1111142888306600_78763216065081507_n
போரால் அனைத்தையும் இழந்த மக்களுக்கு 17 ஆண்டுகளாகத் தொடரும் உதவிப் பணி – ஆளுநர் பாராட்டு
kassapa12
ஜனாதிபதி ஞானசாரரை விடுதலை செய்ய மறுத்தால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வோம் - கஸ்ஸப்ப தேரர்