ஈரானிய கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவசிகிச்சை -சர்வதேச கடல்சார் சட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டோம் என்கின்றார் பிரதியமைச்சர்

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்களின் பணியாளர்கள் 27 பேருக்கு மருத்துவசிகிச்சையை வழங்கும் விடயத்தில் இலங்கை கடல்சார் சட்டங்கள் மற்றும் சர்வதேச பிரகடனங்களை இறுக்கமாக பின்பற்றியே செயற்பட்டது என பிரதிசுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி  தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
கடல்சார் சட்டங்கள் மற்றும் அகதிகள் தொடர்பான சர்வதேச பிரகடனங்களை அடிப்படையாக வைத்தே இலங்கை செயற்பட்டது,தேசிய மத இன மற்றும் ஏனைய வேறுபாடுகளுக்கு அப்பால் சர்வதேச கொள்கைளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவி வழங்கப்பட்டது.
இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே ஈரானிய கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டவேளை உள்ளுர் அவசரசேவை குழுக்கள் உடனடியாக செயற்பட்டு மருத்துவசிகிச்சையை வழங்கியிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நடைமுறைகளை வெளிப்படை தன்மையுடன் பின்பற்றுவது இலங்கை சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களையோ வெளிநாடுகளின் தலையீடுகளையோ தவிர்ப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் உடன்படிக்கைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் இலங்கை தேவையற்ற புவிசார்பதற்றங்களை உருவாக்காமல் தனது கடமைகளை தொடர்ந்தும் செய்யும் என தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் -27 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மருத்துவமனையில்
16930815621492431198
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமாரை வெளியேற்ற பொலிஸார் மீண்டும் நீதிமன்றத்தில் மனு
chemmani145
ராஜ்சோமதேவவின் அறிக்கை சட்டவிரோத படுகொலைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பலாம் - பிரித்தானிய தமிழர் பேரவை
Raj-Somadeva
பேராசிரியர் ராஜ்சோமதேவ மனச்சாட்சிப்படி நடக்கவில்லை பணத்திற்காக அல்லது தனது இனத்தை காப்பாற்ற செயற்படுகின்றார்- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்
861364491_1137554672549164_5587214152717481222_n
செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும்! கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை...!
gajendran
திலீபன் சிலை விவகாரம் - வாக்குமூலம் பெறுவதற்காக கஜேந்திரனுக்கு குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பாணை
batti mayi
மயிலத்தமடு விவகாரம் - ஜனாதிபதியை அவசரமாக சந்திப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம்
batti land
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல்தரை மீட்பிற்கான கலந்துரையாடல்
gna12
சிறைவாசம் அனுபவிக்கும் மததலைவர்கள் மத ஆடைகளை அணிய அனுபவிக்கும் புதிய விதிகள் - வர்த்தமானியில் வெளியிட்டது அரசாங்கம்
namal courts
பொதுமக்களின் பொருளாதார சுமை குறையும் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றால் 500 நாட்கள் சிறையிலிருக்கவும் தயார் – நாமல்