நாடு திரும்புவோருக்கு இதுவா பாதுகாப்பு?கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடும்பத்தினருடன் இணைக்கவேண்டும்- கஜேந்திரன் 

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டுள்ள கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடு;ம்பத்தினருடன் இணைக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஈழத்திலிருந்து கிருஷ்ணகுமார் என்ற இளைஞர் 2009 ஆம் ஆண்டிலே யுத்தம் இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், உயிர் பாதுகாப்புக்கருதி இங்கிருந்து தமிழ்நாடு சென்று அங்கே தங்கியிருந்தார்.

அங்கு அவர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்து, அங்கிருந்து கடுமையான நெருக்கடியான சூழ்நிலை காரணமாக அவர் தனது விருப்பமில்லாவிட்டாலும் கூட அங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்கின்ற ஒரு முடிவெடுத்து, அவர் நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானத்திலே நேற்று பிற்பகல் 4:00 மணியளவில்—26/10/2026 பிற்பகல் 4:00 மணியளவில்—புறப்பட்ட விமானத்தில் அவர் ஏறியிருந்த போது, சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் அவர்களோடு தொடர்புகொண்டு தான் இன்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஒன்னரை மணிநேரத்தில் தான் கொழும்பில் இறங்குவதாகவும், வந்திறங்கியதும் தொடர்புகொள்வதாகவும் தெரியப்படுத்தியிருந்தார்.

ஆனால் இதுவரை நேரத்திற்கும் அவர் அந்த விமான நிலையத்திலிருந்து வெளியே வரவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ எந்தவிதமான தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடைய இந்தச் சட்டத்திற்குப் புறம்பான கைது—அரசு இவரைக் கைது செய்திருக்கிறது என்றுதான் நான் நினைக்கின்றேன். இது அல்லது கைது என்று சொல்ல முடியாது, பெரிய கடத்தல் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்று சொன்னால், இவ்வளவு நேரமாகியும் குடும்பத்தினருக்கு அவருடைய அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இருக்கிறது என்று சொல்லிச் சொன்னால், அனுர அரசாங்கம் கிருஷ்ணகுமாரைக் கடத்தியிருக்கிறது என்றுதான் நாங்கள் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

இவ்வாறான செயல்பாட்டில் என்றும் அனுர அரசாங்கம்—யுத்தம் முடிந்து 17 வருடங்களுக்குப் பின்னரும் ஈழத்தமிழர்களுடைய நிலைமை இதுவாகத்தான் இருக்கிறது.

ஒருபுறத்திலே இந்தியாவிலே தங்கியிருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழ அகதிகளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொள்கின்ற அரசாங்கம், தமிழர்களைத் தொடர்ந்து சித்திரவதை செய்வதும், கைது செய்வதும், காணாமலாக்குவதும் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுப்பதாக இருந்தால், மக்கள் வெளியேறுவதற்குத்தான் முயற்சிப்பார்களே தவிர, ஒருபொழுதும் திரும்பி வருவதற்கும் முயற்சிக்க மாட்டார்கள்.

அனுரகுமார திசாநாயக்கவுக்குப் புரிய வேண்டும்; தாங்கள் 80-களில் தங்கள் சார்ந்த ஜே.வி.பி-யினர் (JVP) அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள் என்று சொல்லிச் சொன்னால், அந்தச் செயல்பாடுகள் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள். ஆனால் அவர்களுக்குப் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு அவர்கள் இன்று நாட்டினுடைய ஜனாதிபதியாக இருக்க முடிகிறது என்று சொல்லிச் சொன்னால், நீங்கள் உட்பட அனைத்துச் சிங்கள அரசியல் கட்சிகளும், சிங்கள இனவாதிகளும் தமிழர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையை இறக்கிவிட்ட பொழுது, அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகத் தமிழர்கள் போராடினார்கள் அல்லது போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். அல்லது எதுவுமே செய்யாமல் தமிழர்களாக இருந்ததற்காக வந்தவர்கள் பல்வேறுபட்ட பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவ்வாறான சம்பவங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகத்தான் அந்த மக்கள் இங்கிருந்து வெளியேறுகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது.

ஆகவே, ஒரு நல்லிணக்கத்தை நீங்கள் ஏற்படுத்துவதாக இருந்தால், யுத்தகாலப் பகுதியிலே நடைபெற்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் நீங்கள் தோண்டிக்கொண்டிருக்காமல், அந்த விடயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தமிழர்கள் இயல்பாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோருகின்றோம். புதிய சட்டங்களையும் கொண்டுவரக் கூடாது என்று சொல்லி கோருகின்றோம்.

அரசு தமிழர்களுக்கு எதிராகச் செய்த அந்த கொடூரங்களை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கூறி, தமிழ் மக்கள் மீது புரிந்த இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என்பதும் எங்களுடைய ஒரு எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆகவே, இந்த அரசு இந்தப்போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழர்களைத் தொடர்ந்து சித்திரவதை செய்வதும், கைது செய்வதும், கடத்துவதும் போன்ற செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். உடனடியாக கிருஷ்ணகுமாருக்கு என்ன நடந்தது என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்திற்கு முரணான செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; அவரை விடுதலை செய்து அவரை குடும்பத்தினருடன் உடனடியாக இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti mayi
மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்
protest11
தையிட்டி பௌத்த விகாரை லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் புலம்பெயர் அமைப்புகள் போராட்டம்
psta no1
அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் ஊடக சுதந்திரத்தை முடக்கும்: கூட்டு எதிர்க்கட்சி
namal courts
பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் - நீதிமன்றத்தில் அலி சப்ரி
rajeevkanth
இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!--ரஜீவ்காந்
ravikaran11
கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்:' தேடுதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த ரவிகரன் எம்.பி. கோரிக்கை!
amnesty
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் சட்டமூலத்தை முற்றிலும் திரும்பப் பெறுங்கள்’: சர்வதேச மன்னிப்புச் சபை கடும் கண்டனம்
basil
மாத்தறை பிரவுண்ஹில் காணி வழக்கு – பசிலுக்கு பிடியாணை
BASL-asks-govt
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ்கொள்வனவு : நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்