எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்கு உட்பட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்விற்கு முன்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை பிரதிசொலிசிட்டர் ஜெனரல் ஜனகபண்டார கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ் போதரகமவிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
பிரதமநீதியரசரின் அனுமதியுடன் கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்விற்கு முன்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக பிரதிசொலிசிட்டது ஜெனரல் தெரிவித்தார்.
இந்த குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் 59 சாட்சிகள் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் கொழும்பு பிரதானநீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் கடைசி தினம் செவ்வாய்கிழமையே எனவும் குறிப்பிட்டார்.