இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பது என்ற பெயரில் அதிகாரிகளுக்கு பரந்துபட்ட அதிகாரங்களை வழங்குகின்றது,பொலிஸ் அதிகாரத்தின் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட வழிமுறைகள் அனைத்தையும் நீக்கி அடிப்படை மனித உரிமை மீறலுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலத்தை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும்.
இந்த சட்டமூலம் ஒருவரை இரண்டு வருடங்கள் தடுத்துவைப்பதற்கும்,சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரங்கள் ஆக்குவதற்கும்,நீதிமன்ற ஆணையின்றி தேடுதல்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தடுப்பதற்கும் இந்த சட்டமூலம் அனுமதியளிக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை போன்ற ஏற்பாடுகளை கொண்டுள்ள இந்த சட்டமூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் உடன்பட மறுப்பவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் ஆபத்தை அதிகரிக்கின்றது.