மக்கள் ஆதரவற்ற கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தவேண்டிய தேவை உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்
களனி பல்கலைகழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
பொதுமக்கள் ஆதரவளிக்காவிட்டாலும் அவசியமான நிதிகொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.
பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக இலங்கை மத்திய வங்கி கடினமான தீர்மானங்களை எடுத்துள்ளது கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மக்கள் ஆதரவு இல்லை என்பதற்காக அவ்வாறான கொள்கைகளை நடைமுறைப்படுத்த தவறினால் முழு நாடும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
உயர் வரிகளை பலர் கடுமையாக எதிர்க்கின்ற போதிலும் வரிகளை அதிகரிக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.இவ்வாறான தீர்மானங்கள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை அமைதியின்மையை உருவாக்கலாம்.
வரிகளை குறைப்பதால் அல்லது இல்லாமல் செய்வதால் நாட்டிற்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது.
உரியவழிமுறை ஊடான தொடர்பாடல்கள் மூலம் மக்கள் வரிகளை குறைப்பதால் அல்லது இல்லாமல் செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணரும் நிலையை ஏற்படுத்தலாம்.
உரிய நேரத்தில் வரி மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் உணரவேண்டும்,சமூகத்தில் சிலர் வரி அதிகரிப்பினை எதிர்ப்பார்கள் என்பதை அரசாங்கம் உணரவேண்டும்,
அவசியமான மக்கள் ஆதரவற்ற கொள்கைகளை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தியதன் காரணமாகவே பொருளாதார ஸ்திரதன்மையை பேணமுடிந்துள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.