கொழும்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போன 24 வயது நபர்- நால்வர் கைதினை தொடர்ந்து மர்மம் விலகியது

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வெல்லம்பிட்டியில் காணாமல்போன 24 வயது நபர் ஒருவரை கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளதாவது
கிரான்ட்பாஸி;ல் உள்ள வாகனதிருத்துமிடத்தில் வைத்து அந்த நபரை கொலை செய்தவர்கள் அவரை உடலை எரித்து அழித்த பின்னர் மிகுதி மனித எச்சங்களை களனி ஆற்றில் வீசியுள்ளனர்.
2025 ஒக்டோபர் மாதம் அந்த நபர் காணாமல்போயுள்ளமை குறித்து பொலிஸில் குடும்பத்தவர்கள் முறைப்பாடு செய்தனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அந்த 2025 ஒக்டோபர் 11 ம் திகதி தனது வாகனதிருத்துமிடத்தில் பலருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தமையும் அவர் காணாமல்போன பின்னர் அந்த நபர்கள் தலைமறைவாகியுள்ளமையும் தெரியவந்தது.
இந்த வருடம் ஒக்டோபர் 30 திகதி கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மாபொல மகரவில் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்,அவர்களிடம் பெற்ற தகவல்கள் மூலம் உஸ்வகெட்டியவில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டி அகலவத்தையை சேர்ந்தவர்கள்.
அவர்கள் வாகனத்தரிப்பிடத்தில் வைத்து அந்த நபரை கொலை செய்த பின்னர் அவரது உடலை பப்பிலியாவலவிற்கு கொண்டு சென்று எரித்து அழித்த பின்னர் மிகுதி மனித எச்சங்களை களனி ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றத்துடன் தொடர்புடைய பல பொருட்களை சந்தேகநபர்களிடமிருந்து மீட்டுள்ள பொலிஸார் களனி ஆற்றுப்பகுதியில் கடற்படை சுழியோடிகளை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

BIMAL1
அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் - கரிசனைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயார்
court-judge-hammer-gavel-696x398
அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு-உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள்
CHEMMANY 16
இனவாத ஏச்சுப் பேச்சுகளின் இரைச்சல் எவ்வாறு இலங்கையின் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகள் பற்றிய விமர்சனப்பூர்வமான இணையவழி அறிக்கையிடலை அமைதியாக்குகிறது
Namal-Rajapaksa-2 (1)
சிறைச்சாலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பது யார், மேலும் உண்மை அவர்களோடு மறைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்வது யார்?
nandalal3
மக்கள் ஆதரவற்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் வரிகளை அதிகரிப்பதும் அவசியம் - மத்திய வங்கி ஆளுநர்
parliment
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசாங்கம் தடுக்கின்றது” – சர்வதேச அளவில் முறையிட எதிர்கட்சி தீர்மானம்
suresh
சமூக வலைத்தளப் பதிவுக்காக TID விசாரணைக்கு அழைப்பு: தர்மலிங்கம் சுரேசுக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு
karu11
கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் அனைவருக்கும் ஆபத்தானது
9abea541-ccf6-443c-b0be-8d8e278928e3
தமிழக அரசே! தமிழகம் வாழ் இலங்கை அகதியை விருப்பமில்லாமல் நாடு கடத்தாதே!